சென்னையில் விறுவிறுப்பாக நடைபெறும் D55 படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்

Actor Dhanush 55 Movie Shooting Update: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்திற்கு தற்காலிகமாக தனுஷ் 55 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சென்னையில் விறுவிறுப்பாக நடைபெறும் D55 படத்தின் ஷூட்டிங் - வைரலாகும் தகவல்

தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி

Published: 

17 Mar 2026 20:52 PM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இவர் சினிமாவில் என்ன செய்தாலும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இயக்குநராக நடிகர் தனுஷ் இயக்கிய அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 3-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

சென்னையில் விறுவிறுப்பாக நடைபெறும் D55 படத்தின் ஷூட்டிங்:

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் இந்த தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி தற்போது பிரசாத் ஸ்டுடியோ, ராயப்பேட்டை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஒரு வீடு உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ், மம்மூட்டி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தனுஷ் மே 2026 வரை தனது கால்ஷீட்களை ஒதுக்கியுள்ளார்; மேலும், ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் ஜூன் 2026-க்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Director Ram: அரசன் பட கதைதான் வெற்றிமாறனின் ஃபர்ஸ்ட் ஸ்டோரியா? – இயக்குநர் ராம் சொன்ன விஷயம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Suriya: ராக்கிங் சாய்… பவழ மல்லி வீடியோ பாடலை பாராட்டிய சூர்யா!

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்