கூலி படத்தில் 4 நிமிட காட்சி நீக்கம்… சிங்கப்பூரில் பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்கலாம்!

Coolie Movie Censor: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூலி படம் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியதால் 18 வயதிற்கு அதிகமாக உள்ளவர்கள் தான் படத்தை பார்க்க திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தில் 4 நிமிட காட்சி நீக்கம்... சிங்கப்பூரில் பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்கலாம்!

கூலி

Published: 

20 Aug 2025 13:49 PM

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. க்ரைம் ஆக்‌ஷன் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் 4 நாட்களில் உலக அளவில் படம் ரூபாய் 404 கோடிகள் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் படத்திற்கு குடும்பங்களுடன் ரசிகர்கள் வர முடியாத கரணத்தால் தான் இந்த வசூல் என்றும் குடும்பங்களுடன் ரசிகர்கள் வந்து இருந்தால் இந்த வசூல் இரண்டு மடங்காக இருந்து இருக்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

மேலும் நேற்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. அதில் படத்திற்கு மறு தணிக்கை செய்து யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவில் என்ன வரும் என்பது பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டு.

சிங்கப்பூரில் பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் கூலி  படம் பார்க்கலாம்:

இந்த நிலையில் சிங்கப்பூரில் நடிகர் ரஜினிகாந்திற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கு மறு தணிக்கை செய்யப்பட்டு படத்தில் 4 நிமிடக் காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு பெற்றோர்கள் அனுமதியுடன் அனைவரும் படத்தைப் பார்க்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

பான் இந்திய நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்த இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு அவ்வளவு வன்முறைகள் இல்லை என்றும் படத்திற்கு யு/கொடுத்து இருக்கலாம் என்றும் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். விரைவில் நீதிமன்றம் இந்தப் படத்திற்கு யு/ஏ கொடுத்தால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… நடிகர் கார்த்தி மீது எனக்கு அப்போ மரியாதை வந்தது… தனுஷ் சொன்ன சம்பவம்!

கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?