நண்பனை விட ஒருத்தன் லைஃப்வுக்கு தேவை இல்லையடா… 19 ஆண்டுகளை நிறைவு செய்தது சென்னை-28 படம்!
19 Years Of Chennai 600 028 Movie: தமிழ் சினிமாவில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சென்னை 600 028. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை 28
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் தொடர்ந்து நடித்து உள்ளனர். மேலும் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் சென்னை 600 028 படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் அறிமுகம் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெய், சிவன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய் ராஜ், பிரசன்னா, ரஞ்சித், அருண், கார்த்திக் ப்ரீத், சம்பத் ராஜ், இளவரசு, விஜயலட்சுமி ஃபெரோஸ், கிறிஸ்டின் செடெக், படவா கோபி, சக்தி சரவணன், இனிகோ பிரபாகரன், மாய் பிரகாஷ், சுந்தர், ஹரி பிரசாந்த், எஸ்.என்.சுரேந்தர், நீலு நஸ்ரீன், ஸ்ரீலதா, சண்முகசுந்தரம், சாம் ஆண்டர்சன், மிர்ச்சி செந்தில், கல்யாண், கருணாஸ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவ்னமான் கேப்பிடல் ஃபிலிம்ஸ் வொர்க்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.பி.பி.சரண் மற்றும் ஜே.கே.சரவணா ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
19 ஆண்டுகளை நிறைவு செய்தது சென்னை-28 படம்:
இளைஞர்களின் வாழ்க்கை மற்றும் நடிபு, காதல் என அனைத்தையும் மையமாக கொண்டு காமெடி ட்ராமவாக உருவாகி இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
Also Read… முதல் பாகத்தை விட ஜெயிலர் 2 படம் மாபெரும் வெற்றியைப் பெறும் – நடிகர் யோகி பாபு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
19 Years. One Squad. Endless Memories. The movie that made us all feel like we belonged to the Sharks. 🦈✨#Chennai600028@vp_offl 💛@Premgiamaren @actorshiva @Actor_Jai @iamvijayvasanth @ajayraaj @Nitinsathyaa#19YearsOfVP#19YearsofChennai28#19YearsofVenkatPrabhu pic.twitter.com/71bG9yfF3V
— vjn (@UVJN) April 26, 2026
Also Read… நிவின் பாலியின் நடிப்பில் ஓடிடியில் வெளியாகி உள்ள பிரதிச்சாயா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ