கல கல காமெடிக்கும் பஞ்சம் இல்லாத ப்ரோ டாடி படம்… ஹார்ஸ்டாரில் மிஸ்செய்யாமல் பாருங்க!
Bro Daddy Movie: மலையாள சினிமாவில் கல கல காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் படம் ப்ரோ டாடி. இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது குறிப்பிடத்தக்கது.

ப்ரோ டாடி படம்
நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் (Prithviraj Sukumaran) இயக்கத்தில் வெளியான படம் ப்ரோ டாடி. இந்தப் படத்தின் கதையை ஸ்ரீஜித் என் மற்றும் பிபின் மாலியேகல் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இந்தப் படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் மூலம் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து உள்ளார். கடந்த 26-ம் தேதி ஜனவரி மாதம் 2022-ம் ஆண்டு நேரடியகா ஹார்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. கொரோனா காலம் என்பதால் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ப்ரோ டாடி படம் ஓடிடியில் வெளியானது. கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருந்த மக்களுக்கு காமெடி ட்ராமாவாக வெளியான இந்தப் படம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து விமர்சனத்தைப் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் பிரித்விராஜ் மற்றும் மோகன்லால் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் லாலு அலெக்ஸ், மீனா, கல்யாணி பிரியதர்ஷன், கனிஹா, ஜெகதீஷ், சௌபின் ஷாஹிர், உன்னி முகுந்தன், மல்லிகா சுகுமாரன், சார்லி, ஆண்டனி பெரும்பாவூர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தீபக் தேவ் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ப்ரோ டாடி படத்தின் கதை என்ன?
பெங்களூரில் ஐடியில் வேலை செய்பவர்கள் பிரித்விராஜ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன். இவர்கள் இருவரும் காதலிப்பதால் அங்கே லிவிங்டுகெதரில் இருக்கிறார்கள். இவர்களின் குடும்பங்களும் ஃபேமிலி ப்ரன்ஸ்களாக இருக்கிறார்கள். மேலும் நடிகர் மோகன் லால் மற்றும் மீனா பிரித்விராஜின் பெற்றோர்க்ளாக இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
கல்யாண வயதில் மகன் இருந்தாலும் மோகன்லால் மிகவும் ரொமாண்டிக்கான ஆளாக இருக்கிறார். இதன் காரணமாக மீனா கர்பம் ஆகிறார். அதே நேரத்தில் வீட்டிற்கு தெரியாமல் லிவிண்டுகெதரில் இருந்த பிரித்விராஜ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் கர்பமாக ஆகிறார்.
Also Read… ஃபகத் பாசிலின் ஆவேஷம் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்த நிலையில் தங்களது குடும்பத்தினரிடம் எப்படி இந்த விசயத்தைக் கூறுவது என்று பிரித்விராஜ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில் மகனிடம் எப்படி அம்மா மீனா கர்பமக இருப்பதை கூறுவது என்றும் மாறிமாறி ப்ளான் போடுவதே காமெடியாக இருக்கும். இறுதியில் இவர்கள் இந்தப் பிரச்னைகளை எப்படி சரி செய்தார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
ப்ரோ டாடி படத்தின் ட்ரெய்லர் இதோ:
Also Read… ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாலினி என்ன மிரட்டுவாங்க – மாதவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!