இணையத்தில் கவனம் பெறும் பைசன் காளமாடன் படத்தின் மேக்கிங் வீடியோ
Bison in the Wilderness | இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பைசன்
இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj) இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மக்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மனத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அவர் தனது வாழ்க்கையில் கபடியை பிடித்துக்கொண்டு அதன்மூலம் தனது வாழ்க்கையில் இருந்து வெளியேற நினைக்கிறார். அவர் எப்படி எல்லாம் இந்த சமூகத்தின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து இந்தியாவிற்காக கபடி விளையாடினார் என்பதே படத்தின் கதை.
இந்தப் படத்தில் மனத்தி கணேசனாக நடிகர் துருவ் விக்ரம் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் இவரது பெயர் மனத்தி கிட்டன் என்று அழைக்கப்படுகிறார். இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் திரைக்கதை மற்றும் வசனம் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பைசன் காளமாடன் படத்தின் மேக்கிங் வீடியோ:
இந்தப் படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக தங்கி படத்திற்காக கபடி விளையாட்டு உட்பட பல பயிற்சிகளைக் மேற்கொண்டார். இந்தப் படத்திற்காக அவர் எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டார் என்பது குறித்து தற்போது படக்குழு வெளியிட்டுள்ள மேக்கிங் வீடியோவில் தெரிகிறது. இந்த பைசன் காளமாடன் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… இது வேறலெவல் ட்விஸ்டா இருக்கே… இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பெண் போட்டியாளர்?
இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Kaalamaadan’s Journey into the Untamed Wilderness!! 💥#MakingofBison
▶️▶️ https://t.co/FsQz66JAnw#BisonKaalamaadan 🦬#Blockbuster Raid in the Theatres Near You! 💥💥💥@applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @beemji @Tisaditi #DhruvVikram @anupamahere… pic.twitter.com/KBTKk2RRKi— Mari Selvaraj (@mari_selvaraj) October 25, 2025
Also Read… WHO IS YOUR TYPE? இணையத்தில் கவனம் பெறும் ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் ஃப்ரண்ட் படத்தின் ட்ரெய்லர்