இதுவரை தமிழ் பிக்பாஸில் கோப்பையை வென்றது யார் யார்? அதில் பெண் போட்டியாளர்கள் எத்தனைபேர் தெரியுமா?

Bigg Boss Tamil Title Winners List: தமிழில் மக்களிடையே ஆண்டுதோறும் வெளியாகி வரவேற்கப்படும் ஒரு பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சியானது இதுவரை 9 வருடங்களாக ஒளிபரப்பப்பட்டுவந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் யார் யார்?, அதில் எத்தனை பெண் போட்டியாளர்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

இதுவரை தமிழ் பிக்பாஸில் கோப்பையை வென்றது யார் யார்? அதில் பெண் போட்டியாளர்கள் எத்தனைபேர் தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் வெற்றியாளர்கள்

Published: 

18 Jan 2026 18:05 PM

 IST

நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) சின்னத்திரையில் தொகுப்பாளராக தொகுக்க ஆரம்பித்த நிழச்சித்தான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியானது இந்தியில் கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு முன்னதாகவே இந்தி மொழியில் தொடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வந்த இந்நிகழ்ச்சியின் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் 7வது சீசனோடு கமல்ஹாசன் இதிலிருந்து விலகிவிட்டார். இதை அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இந்நிகழ்ச்சியை தொகுத்துவந்த நிலையில், இந்த 2025 -2026ம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இன்று 2026 ஜனவரி 18ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசன் 9ன் தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் (Divya Ganesh) வெற்றிபெற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இதுவரை தமிழில் வெளியான சீசன்களில் மொத்தம் எத்தனை பெண் போட்டியாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா? இணையத்தில் கசிந்தது தகவல்

பிக் பாஸ் சீசன் 1ன் தமிழ் நிகழ்ச்சி வெற்றியாளர் :

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிதான் தமிழில் முதல் முதலில் பெருமளவு வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 2017ல் வெளியான இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் (Aarav) பிக் பாஸ் சீசன் 1ன் டைட்டில் வின்னரானார். இதுதான் உண்மையான பிக் பாஸ் நிகழ்ச்சி என்றே கூறலாம். இதில் அவ்வளவு சுவாரஸ்ய விஷயங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 2 தமிழ் நிகழ்ச்சி வெற்றியாளர் :

இந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் முதல் 4 இடத்தையும் பெண் போட்டியாளர்கள் வகித்திருந்தார். அதில் நடிகை ரித்விகா (Riythvika) பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னரானார். நடிகை ஐஸ்வர்யா தத் 2வது இடத்தைப் பிடித்திருந்தார்.

பிக் பாஸ் சீசன் 3 தமிழ் நிகழ்ச்சி வெற்றியாளர் :

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிதான் மொத்த சீசன்களிலே மிகவும் அருமையாக இருந்த சீசன் என கூறலாம். இதில் நகைச்சுவையே அதிகமாக இருந்தது. இதில் இறுதிக்கட்டத்திற்கு சாண்டி மற்றும் முகின் ராவ் இருவரும் முன்னேறிய நிலையில், முகின் (Mugen Rao) சீசன் 3ன் டைட்டிலை தட்டிச் சென்றார்.

பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சி வெற்றியாளர் :

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது அதிரடி மற்றும் அதிகம் சண்டைகள் கொண்ட நிகழ்ச்சியாக இருந்தது. இதில் பாலாஜி ஆரி அர்ஜுனா (Aari Arujunan) இறுதிக்கட்டத்திற்கு முன்னேறிய நிலையில், ஆரி டைட்டில் வின்னரானார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி வெற்றியாளர்:

கமல்ஹாசனின் இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணனும் தொகுத்திருந்தார். இந்த சீசன் 5ன் வெற்றியாளராக நடிகர் ராஜு ஜெயமோகன் (Raju Jeyamohan) டைட்டிலை பெற்றிருந்தார்.

பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி வெற்றியாளர் :

பிக் பாஸ் சீசன் 6 தமிழில் இறுதிக்கட்டத்திற்கு விக்ரமன் மற்றும் அசீம் (Azeem)சென்ற நிலையில், டைட்டிலை அசீம் தட்டிச்சென்றார். இந்த சீசனில் பல சண்டைகள் இந்த் வீட்டில் நடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி வெற்றியாளர் :

மேலும் அனைவராலும் மிகவும் ஆர்வமாக பார்க்கப்பட்ட சீசன்களில் ஒன்று பிக் பாஸ் சீசன் 7. பிரதீப் ஆன்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டிருந்தார். அதை எதிர்த்து அர்ச்சனா பேசியிருந்த நிலையில், மக்களின் ஆதரவு அவருக்கு அதிகமாகவே இருந்தது. வைல்ட் கார்ட் என்டரியாக நுழைந்த இவர் சீசன் 7ன் டைட்டிலையும் வென்றார். பிக்பாஸ் சீசன் 2-ஐ அடுத்ததாக 4 சீசனுக்கு பிறகு பெண் போட்டியாளராக அர்ச்சனா (Archana) டைட்டிலை பெற்றிருந்தார்.

பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி வெற்றியாளர் :

மேலும் கடந்த 2024 2025ல் வெளியான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது மிகவும் வித்தியாசமான போட்டியாகவே இருந்தது. இதில் யார் வெற்றியாளராவார்? என யூகிக்கமுடியாத நிலை இருந்தது. அந்த விதத்தில் இதன் டைட்டிலை முத்துக்குமரன் (Muthukumaran) வென்றிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் படிங்க: நான் எனக்கு சொத்து சேர்க்கவேண்டும் என்பதற்காக ஸ்பான்சர்களை தேடவில்லை – வைரலாகும் நடிகர் அஜித் குமாரின் பேச்சு!

ஆக மொத்தத்தில் இதுவரை வெளியான பிக் பாஸ் சீசன்களில் 6 ஆண் போட்டியாளர்கள், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியோடு சேர்த்து 3 பெண் போட்டியாளர்கள் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!