தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அனைவரிடம் சண்டையிடும் சாண்ட்ரா… வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துகொண்ட பார்வதியை பார்வையாளர்கள் டாக்ஸிக் என்று கூறி வந்த நிலையில் தற்போது வைல்கார்ட் போட்டியாளராக வந்த சாண்ட்ராவை டாக்ஸிக் என்று கூறி வருகின்றனர்.

பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல நெகட்டிவான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்து வருகின்றது. இதுவரை 8 சீசன்களாக இல்லாத நெகட்டிவ் விமர்சனம் இந்த 9-வது சீசனில் அதிக அளவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக அனைத்து பிக்பாஸ் சீசன்களிலும் சண்டை சச்சரவுகள் இருக்கதான் செய்யும். ஆனால் அந்த சண்டையை தொடர்ந்து போட்டியாளர்கள் தங்களது பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதையும் பார்வையாளர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் மகிழ்ச்சி என்ற எந்த விசயத்தையும் வெளியில் காட்டுவதற்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒரு சில போட்டியாளர்கள் தொடர்ந்து அனைவரிடம் சண்டையிட்டுக்கொண்டே இருப்பதுதான் எண்டர்டெய்ன்மெண்ட் என்று நினைத்துக்கொண்டு அதனையே தொடர்ந்து செய்து வருகின்றனர். இது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய போது பார்வதி, வாட்டர்மெலன் திவாகர் ஆகியோர் தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர். இவர்கள் தொடர்ந்து சண்டையிடுவதே போட்டியாக கருதி செய்துக்கொண்டு இருந்தனர். இதில் பார்வதி அதிக அளவில் தொடர்ந்து நெகட்டிவ் வைபை ரசிகர்களுக்கு கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பெயரை தற்போது சாண்ட்ரா எடுத்துள்ளார்.
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அனைவரிடம் சண்டையிடும் சாண்ட்ரா:
அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்த சாண்ட்ராவில் செயல்கள் முதலில் ரசிகர்களிடையே வரவேற்கதக்க விதமாக இருந்த நிலையில் தற்போது அனைவரிடமும் தொடர்ந்து சண்டையிடுவது பார்வையாளர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து அனைத்து எபிசோடுகளிலும் யாருடனாவது சண்டையிடுகிறார். குறிப்பாக திவ்யாவை அவர் டார்கெட் செய்து சண்டையிடுவது ரசிகர்கள் டாக்ஸிக் பிகேவியர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read… பிக்பாஸில் திவ்யா மீது கோபத்தில் இருக்கும் சாண்ட்ரா… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day73 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/z4oggSiJ82
— Vijay Television (@vijaytelevision) December 17, 2025
Also Read… பராசக்தி ஃபீவர் தொடங்கியது… படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்