சில நேரங்கள்ல சில மனுசங்கள புரிஞ்சுகவே முடியாது – பிக்பாஸ் தமிழ் சீசன் 9 புரோமோ இதோ

Bigg Boss Tamil Season 9: தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைப்பது போல சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சில நேரங்கள்ல சில மனுசங்கள புரிஞ்சுகவே முடியாது - பிக்பாஸ் தமிழ் சீசன் 9 புரோமோ இதோ

பிக்பாஸ் தமிழ்

Published: 

18 Sep 2025 20:32 PM

 IST

வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பதை விட சின்னத்திரையில் வெளியாகும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மட்டும் இன்றி ரியால்டி நிகழ்சிகளுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரியால்டி நிகழ்ச்சிகளில் குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக மக்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். சுமார் 7 சீசன்களாக கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் கமல் ஹாசன்.

கடந்த 8-வது சீசனை அவர் தொகுத்து வழங்கவில்லை என்று அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க தொடங்கினார். தொடர்ந்து 8 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது 9- வது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பாக்க பாக்க தான் புரியும், போக போக தான் தெரியும்:

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் லோகோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவைப் நிகழ்ச்சிக் குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கமல் சார் கூட நடிக்கும் போது அந்த சீன்ல பயந்து அழுதுட்டேன் – நடிகை மீனா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… குழிதோண்டி புதைக்கிற மாதிரியான விசயத்தை பண்ணாதீங்க – பாடகர் சத்யன் மகாலிங்கம்