பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்த ரம்யா ஜோ… விஜய் சேதுபதி!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 62 நாட்களை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி கடந்த வாரம் முழுவதும் நடந்த பிரச்னைகளை பேசுகையில் வீட்டைவிட்டு வெளியேறுவதாக கூறியது தற்போது வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்த ரம்யா ஜோ... விஜய் சேதுபதி!

பிக்பாஸ்

Published: 

06 Dec 2025 19:19 PM

 IST

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என தொடர்ந்து இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த ஒவ்வொரு மொழியிலும் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அந்த மொழியில் முன்னணி நடிகர்கலாக வலம் வருபவர்களே தொகுத்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்தியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு சல்மான் கான் தொகுப்பாளராக இருக்கிறார். தொடர்ந்து தெலுங்கில் நாகர்ஜுனார், மலையாள சினிமாவில் மோகன்லால், கன்னட சினிமாவில் கிச்சா சுதீப் மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக தமிழில் தொடர்ந்து 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

தொடர்ந்து விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிறகு ரசிகர்களிடையே நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன்படி கடந்த 8-வது சீசனில் பெரிய அளவில் போட்டியாளர்களை தட்டிக்கேட்காத விஜய் சேதுபதி தற்போது 9-வது சீசனில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வீட்டில் நடக்கும் பிரச்னைகளை போட்டியாளர்களின் மூச்சியில் அடிப்பதுபோல நேரடியாகவே கேட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் பேச்சு வரவேற்பைப் பெற்று வருகின்றது.

வீட்டைவிட்டு வெளியேற நினைத்த ரம்யா ஜோ… விஜய் சேதுபதி அதிரடி:

இந்த நிலையில் கடந்த வாரம் நடைப்பெற்ற பிரச்னைகள் குறித்து விஜய் சேதுபதி வீட்டில் உள்ளவர்களிடமும் கடந்த வாரம் வீட்டு தலையாக இருந்த ரம்யா ஜோவிடமும் கேள்வி எழுப்புகிறார். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவதாக ரம்யா ஜோ தெரிவிக்கிறார். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி தாராளமாக போங்க என்று பிக்பாஸ் வீட்டின் கதவை திறந்து வைக்கிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பெரிய பட்ஜெட்டில் தயாராகும் நடிகர் விஜய் சேதுபதியின் படம்? வைரலாகும் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜிவி பிரகாஷின் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்… வைரலாகும் பதிவு

சதமடித்த கோலி.. மனைவி அனுஷ்கா சர்மாவின் பதிவு..
ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. புத்தாண்டில் வருகிறது புதிய வசதி!
லாட்டரி மூலம் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்
ஓய்வு குறித்து முதன்முறையா மனம் திறந்த கமல்ஹாசன்!