பிக்பாஸ் வீட்டில் கம்ருதின் – துஷார் இடையே கைகலப்பு – வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 9: தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளியாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த 2025ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நடைபெற்றுவரும் நிலையில், இன்று 18 வது நாளில் பிக்பாஸ் வீட்டினுள் கம்ருதின் மற்றும் துஷார் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 9 தமிழ்
கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியானது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்கிவருகிறார். கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் இந்த பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியானது நடைபெற்று வரும் நிலையில், கடந்த பிக்பாஸ் சீசன் 7 தமிழ் வரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து. இந்த பிக்பாஸ் சீசன் 7ம் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்றுவரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியானது 2 வாரங்களை கடந்து, மக்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த சீசன் 9 தொடக்கத்திலே பல பிரச்னைகளுடன்தான் தொடங்கியது என்றே கூறலாம்.
இந்நிலையில், இன்று 18வது நாளில் வெளியான 3வது ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் கம்ருதின் (Kamrudin) மற்றும் துஷார் (Tushar) இடையே கைகலப்பு ஏற்படுகிறது. இவர்கள் இருவருமே பிக்பாஸ் வீட்டினுள் சண்டையில் ஈடுபடுவது போன்ற ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் வைல்கார்ட் போட்டியாளர்களாக வரும் பிரபல ஜோடி? வைரலாகும் தகவல்
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் குழு வெளியிட்ட 18வது நாளின் 3வது ப்ரோமோ வீடியோ :
#Day18 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/otfSRsKlhd
— Vijay Television (@vijaytelevision) October 23, 2025
இந்த ப்ரோமோவில் கம்ருதின், துஷார் எப்பொழுதும் தனக்கு பின்னாலே வருவதாக கனியிடம் பேசிவருகிறார். மேலும் இதில் துஷார் மற்றும் கம்ருத்தின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் ஒரு கட்டத்தில் கம்ருதின் மற்றும் துஷார் இருவருக்குள் கைகலப்பு ஏற்படுகிறது. இந்த சண்டையில் கனி, அவர்களை தடுத்து நிறுத்துவதுபோல இருக்கிறது.
இதையும் படிங்க: சீதா ராமன் பட இயக்குநருடன் கூட்டணி… பிரபாஸின் புது பட டைட்டில் போஸ்டர் வெளியானது!
இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 18வது நாளிலே இவ்வாறு அடித்துக்கொள்கிறார்களே எனவும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 9 தமிழில் வைல்ட்கார்ட் என்ட்ரி :
இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் தொடங்கி வெறும் 18 நாட்களே ஆனா நிலையில், மொத்தம் 17 போட்டியாளர்கள் இருக்கின்றனர். போட்டி தொடங்கிய முதல் வாரத்தில் நந்தினி என்பவர் சில காரணங்களால் வெளியேறினார். அதை தொடர்ந்து முதல் வார ஏவிக்ஷனில் இயக்குநர் பிரவீன் காந்த் மற்றும் 2வது வார ஏவிக்ஷனில் அப்சரா எஸ் ஜே போன்ற போட்டியாளர்கள் வெளியேறினார். இதை தொடர்ந்து இந்த வைல்ட்கார்ட் எண்டரியில் பிரபல ஜோடிகளான பிரஜின் மற்றும் சாண்ட்ரா உள்ளே நுழைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.