அனுபமா பரமேசுவரனின் லாக்டவுன் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேசுவரன். இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள லாக்டவுன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன்
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன நடிகை அனுபமா பரமேசுவரன் (Actress Anupama Parameswaran) தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து நாயகன்களுக்கு நாயகியாக மட்டும் இன்றி படங்களில் முன்னணி வேடத்திலும் நடிகை அனுப்பமா பரமேசுவரன் நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகை அனுபமா பரமேசுவரனுக்கு இந்த ஆண்டு ஒரு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது என்று சொல்லலாம். இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்து இதுவரை 6 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த ஆண்டிலேயே 7-வது படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதன்படி தமிழ் மொழியில் மட்டும் இந்த 2025-ம் ஆண்டில் நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் டிராகன் மற்றும் பைசன் காளமாடன் ஆகிய படங்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பர்தா மற்றும் கிஷ்கிந்தபுரி என இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாள சினிமாவில் இதுவரை ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா மற்றும் தி பெட் டிடெக்டிவ் ஆகியவை திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது.
டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் அனுபமா பரமேசுவரனின் லாக்டவுன் படம்:
இந்த நிலையில் தற்போது இந்த 2025-ம் ஆண்டில் நடிகை அனுபமா பரமேசுவரனின் நடிப்பில் 7-வதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் லாக்டவுன். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருந்த நிலையில் முன்னதாக இந்தப் படத்தின் வெளியீடு ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
அதன்படி தற்போது டிசம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு லாக்டவுன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஏஆர் ஜீவா இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன் படக்குழு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… இது ஃபன் டாஸ்கா? இல்ல வன்மம் டாஸ்கா? – வைரலாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீடியோ