எனக்கு முதல் ப்ளாக்பஸ்டர் படத்தை கொடுத்தது சிவகார்த்திகேயன் தான் – அனிருத்

Anirudh Ravichander: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் ராக் ஸ்டாராக கலக்கி வருபவர் இசையமைப்பாளர் அனிருத். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் அனிருத் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய வைரலாகி வருகின்றது.

எனக்கு முதல் ப்ளாக்பஸ்டர் படத்தை கொடுத்தது சிவகார்த்திகேயன் தான் - அனிருத்

சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்

Published: 

02 Sep 2025 15:32 PM

கோலிவுட் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் அனிருத் (Actor Anirudh). அறிமுகம் ஆன முதல் படத்திலேயே பான் இந்திய அளவில் பிரபலமானார் அனிருத். இளம் இசையமைப்பாளராக சினிமாவில் பல கோடி ரசிகர்களைப் பெற்றார். இந்தப் படத்தை தொடர்ந்து அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்கள் அனைவரும் அனிருத்தை ராக்கிங் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கத் தொடங்கினர். அறிமுகம் ஆன சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்க தொடங்கினார் அனிருத். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய ஸ்டாராக மாறினார் அனிருத்.

சமீபத்தில் இவரது இசையில் தமிழ் சினிமாவில் வெளியான கூலி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடித்த பான் இந்திய நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் அனிருத் இசையமைத்த இண்ட்ரோ தீம் மியூசிக் தியேட்டரையே தெரிக்கவிட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்கள் எப்படி இருந்தாலும் அதில் வரும் அனிருத்தின் இசை நிச்சயமாக ரசிகர்ளின் வரவேற்பைப் பெற தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அனிருத் சிவகார்த்திகேயன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயன் குறித்து நெகிழ்ந்து பேசிய அனிருத்:

அதன்படி சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திற்கு தற்போது அனிருத் இசையமைத்துள்ளார். இது இவர்களின் கூட்டணியில் உருவாகிம் 8-வது படம் ஆகும். இந்த நிலையில் படத்தின் விழாவில் பேசிய அனிருத் சிவகார்த்திகேயன் குறித்து நெகிழ்ந்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

அதில் அவர் கூறியதாவது சினிமாவில் நாங்க இருவரும் ஒரே நேரத்தில் தான் அறிமுகம் ஆனோம். அவரும் நானும் பெஸ்ட் ஃப்ரன்ஸ், ப்ரதர் என்ன வேணும்னாலும் சொல்லலாம். நான் 3 படத்தின் மூலம் அறிமுகம் ஆகி இருந்தாலும் எனக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தப் படம் சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் தான். அவர் இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்ததற்கு காரணம் அவரின் நல்ல மனசு என்று சொல்லும் போது சிவகார்த்திகேயன் கண்கலங்கியது வைரலாகி வருகின்றது.

Also Read… ஜான்வி கபூர் விமானப்படை விமானியாக நடித்த குஞ்சன் சக்சேனா எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

இணையத்தில் வைரலாகும் அனிருத்தின் வீடியோ:

Also Read… விஜயின் பூவே உனக்காக படத்தில் இரண்டு க்ளைமேக்ஸா? நடிகை சங்கீதா சொன்ன விசயம்!