ராட்சசன் படத்தில் நடிக்க அந்த நடிகர் தான் காரணம் – நடிகை அமலா பால் சொன்ன விசயம்!
Actress Amala Paul: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன நடிகை அமலா பால் தற்போது தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தமிழில் ராட்சசன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ராட்சசன்
இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ராட்சசன். இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal) நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அமலா பால் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராதா ரவி, சங்கிலி முருகன், நிழல்கள் ரவி, காளி வெங்கட், தாஸாக முனிஷ்காந்த், நான் சரவணன், கிறிஸ்டோபர் பெர்னாண்டஸ், யாசர், மேரி பெர்னாண்டஸ், வினோதினி, சுசேன் ஜார்ஜ், மோனிகா, வினோத் சாகர், உஷா எலிசபெத், கஜராஜ், பசுபதி, ஜெய் ஆனந்த், தங்கம் பரமானந்தம், சஞ்சய், அபிராமி, ரவீனா தாஹா, ராகவி ரேணு, திரிஷாலா, பிரியா, ரவிசங்கர், ரேகா பத்மநாபன், கீதா நாராயணன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். மேலும் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் படத்தப் பார்த்த பலர் மிகவும் நடுக்கமாக இருந்தது இந்தப் அப்டத்தைப் பார்த்தபோது என்று விமர்சனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ராட்சசன் படத்தின் முதலில் நடிக்க மறுத்துவிட்டேன்:
ராட்சசன் படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் ராம்குமார் முதலில் என்னிடம் கதை சொல்ல வந்தார். அவர் சிறப்பாக படத்தை இயக்க கூடியவர். ஆனால் அவருக்கு சரியாக கதையை சொல்லத் தெரியாது. அவர் சொல்லும்பொப்தே அது சரியாக இல்லை என்பதால் நான் படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டேன்.
பிறகு நடிகர் விஷ்ணு விஷால் தான் எனக்கு கால் பன்னி அவருக்கு சரியாக கதை சொல்ல வராது. நீங்க என்ன நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். அதனால் தான் நான் அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். அதன் பிறகே அந்தப் படத்தில் நடிக்கும் போது ராம் குமார் குறித்து தெரிந்தது என்று நடிகை அமலா பால் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தீமைதான் வெல்லும் என்ன நினைத்தாலும் – 10 ஆண்டுகளை நிறைவு செய்தது ரவி மோகனின் தனி ஒருவன் படம்
நடிகை அமலா பால் வெளியிட்டுள்ள சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… ரீ ரிலீஸாகும் மாதவனின் சூப்பர் ஹிட் படம் ரன் – படக்குழு வெளியிட்ட புது அப்டேட்!