வெளியானது அல்லு அர்ஜூனின் 22-வது படத்தின் டைட்டில் போஸ்டர்
Allu Arjun 22nd Movie Name Out Now: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த ஒரு வருடமாக அவரது 22-வது படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வரும் நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு டைட்டிலை படக்குழு வெளியிட்டு உள்ளது.

ராகா
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் இறுதியாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருந்தது. முதல் பாகத்தின் வெற்றியை விட இரண்டாம் பாகம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இது இந்திய அளவில் மட்டும் இன்றி உலகில் பல நாடுகளில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான லீடும் வைக்கப்பட்டு இருப்பதால் அந்தப் படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் இயக்குநர் அட்லி உடன் கூட்டணி வைத்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டனர். மேலும் அந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தில் நடிகர் அட்லி உடன் இணைந்து நடிகர்கள் பலர் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதில் குறிப்பாக நடிகை தீபிகா படுகோன் கதாப்பாத்திர வீடியோ மற்றும் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் மற்ற நடிகர்களான மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ரம்யா கிருஷ்ணன், ஜிம் சர்ப் மற்றும் யோகி பாபு நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அல்லு அர்ஜுனின் ராகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது:
அதன்படி சயின்ஸ் பிக்சன் ஆக்சன் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஒரு வருடமாக விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று 08-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது இந்தப் படத்திற்கு ராகா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் போஸ்டரில் அல்லு அர்ஜுன் மனிதனின் முகத்துடனும் விலங்கின் கையுடனும் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Prepare yourself for a vision beyond limits ✨@alluarjun @Atlee_dir @deepikapadukone⁰#राका | #రాకా | #ರಾಕಾ | #ராக்கா | #രാക്ക | #রাকা | راکا# pic.twitter.com/ymTBHoOfpI
— Sun Pictures (@sunpictures) April 8, 2026
Also Read… தேர்தல் முடியும்வரை.. TN2026 பட ரிலீஸை நிறுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!