AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக அமைச்சர்கள் சொத்து பட்டியல் பார்ட் 2: ராஜ கண்ணப்பன் முதல் சக்கரபாணி வரை… முழு விவரம் உள்ளே!

DMK Ministers Asset Details: தமிழகத்தில் திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அமைச்சர ராஜ கண்ணப்பன் முதல் சக்கரபாணி வரை சொத்துக்கள் அடிப்படையில் எந்தெந்த இடத்தில் உள்ளனர் என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

திமுக அமைச்சர்கள் சொத்து பட்டியல் பார்ட் 2: ராஜ கண்ணப்பன் முதல் சக்கரபாணி வரை… முழு விவரம் உள்ளே!
திமுக அமைச்சர்கள் சொத்து பட்டியல் விவரம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 08 Apr 2026 15:44 PM IST

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அவர்களின் சொத்து விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பகுதி 2- இன்படி பின்வருமாறு:

மேலும் படிக்க: திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல்… அமைச்சர் காந்தி முதல் பெரியகருப்பன் வரை!

அமைச்சர் ராஜகண்ணப்பன்: அவரது பெயரில் அசையும் சொத்து ரூ.23 கோடி, மரணம் அடைந்த அவரது மனைவி பெயரில் ரூ.1.44 கோடி. அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.42 லட்சம், மனைவி பெயரில் ரூ.45 லட்சம் உள்ளது.
அமைச்சர் ரகுபதி: அவரது பெயரில் அசையும் சொத்து ரூ.4.22 கோடி, மனைவி பெயரில் ரூ.7.92 கோடி, கூட்டு குடும்பம் ரூ.90 லட்சம். அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.1.67 கோடி, மனைவி பெயரில் ரூ.7 கோடி, கூட்டு குடும்பம் ரூ.4 கோடி சொத்துகள் உள்ளது.
அமைச்சர் எ.வ. வேலு: இவரது பெயரில் அசையும் சொத்து ரூ.2.45 கோடி, மனைவி பெயரில் ரூ.91 லட்சம். அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.10.80 கோடி, மனைவி பெயரில் ரூ.6.60 கோடி உள்ளது.
அமைச்சர் முத்துசாமி: இவரது பெயரில் அசையும் சொத்து ரூ.1.79 கோடி, குடும்ப சொத்து ரூ.2.21 கோடி. அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.6.20 கோடி. குடும்ப சொத்து ரூ.9.76 கோடி.
அமைச்சர் தங்கம் தென்னரசு: இவரது பெயரில் அசையும் சொத்து ரூ.54 லட்சம், மனைவி பெயரில் ரூ.1.76 கோடி, மகள் பெயரில் ரூ,70 லட்சம். அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.1 கோடி, மனைவி பெயரில் ரூ.15.5 கோடி உள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: இவரது பெயரில் அசையும் சொத்து ரூ.1.48 கோடி, மனைவி பெயரில் ரூ.3.36 கோடி, கூட்டு குடும்பம் ரூ.2.15 கோடி, மூத்த மகன் பெயரில் ரூ.9 லட்சம், இளைய மகன் பெயரில் ரூ.8 லட்சம். அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.3.57 கோடி. மனைவி பெயரில் ரூ.6.75 கோடி. கூட்டு குடும்பம் ரூ.1.20 கோடி உள்ளது.
அமைச்சர் சிவசங்கர்: இவரது பெயரில் அசையும் சொத்து ரூ.1.47 கோடி, மனைவி பெயரில் ரூ.2.23, கூட்டுக் குடும்பம் ரூ.2.59 கோடி. மூத்த மகன் பெயரில் ரூ.78 லட்சம். இளைய மகன் பெயரில் ரூ.45 லட்சம். அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.4.88 கோடி, மனைவி பெயரில் ரூ.2.88 கோடி, கூட்டுக்குடும்பம் ரூ.2.87 கோடி சொத்துக்கள் உள்ளது.
அமைச்சர் சக்கரபாணி: இவரது பெயரில் அசையும் சொத்து- ரூ.3.76 கோடி, மனைவி பெயரில் ரூ.2.10 கோடி. அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.2.43 கோடி, மனைவி பெயரில் ரூ.7.34 கோடி உள்ளது.

மேலும் படிக்க: திமுக அமைச்சர்களில் குறைந்த சொத்து மதிப்புடையவர் யார் தெரியுமா… கவனம் ஈர்க்கும் தகவல்!

Follow Us