Ajith Kumar: ஒர்க் ஷாப் வைக்கணும்-னு ஆசை.. நான் சினிமாவிற்கு வந்த காரணமே அதுதான் – அஜித் சொன்ன விஷயம்!
Ajith Unexpected Cinema Entry: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் தற்போது சினிமாவில் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு, கார் ரேஸில் இறங்கியுள்ளார். அந்த விதத்தில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அவர், தான் சினிமாவிற்கு எவ்வாறு நடிக்கவந்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

அஜித் குமார்
கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர்தான் அஜித் குமார் (Ajith Kumar). இவர் சினிமாவில் தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடித்து, ரசிகர்களை கவர்ந்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 63 படங்கள் வெளியாகியிருக்கிறது.அந்த விதத்தில் இவருக்கு சினிமாவில் முதல் திரைப்படமாக அமைந்ததுதான் அமராவதி (Amaravathy). கடந்த 1993ம் ஆண்டில் வெளியான இந்த படத்தின் நடித்து கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவே, அடுத்தடுத்து தமிழில் நடித்துவந்தார். அந்த வகையில் தமிழில் நடிகர் விஜய்யுடன் (Vijay) ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அஜித் நடிக தொடங்கினர். அதில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அவள் வருவாளா போன்ற படங்ககள் அஜித்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. அந்த விதத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்தும் ஹீரோவாகவே படங்களில் நடித்துவருகிறார் இவர்.
இறுதியாக இருவரின் நடிப்பில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது கார் ரேஸ் போட்டியில் அஜித் குமார் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் முன்னதாக நேரக்கனல் ஒன்றில் பேசியிருந்த அஜித் குமார், சினிமாவில் எவ்வாறு நடிக்கவந்தேன் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினி – விஜய் ஸ்டைல் நயன்தாராவிடமும் இருக்கு – கவின் பேச்சு!
சினிமாவில் நடிக்க வந்ததற்கான காரணம் குறித்து அஜித் பேச்சு:
அந்த நேர்காணலில் அஜித் பேசுகையில், “எனக்கு சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது ஆர்வம் இல்லை. பின்னர் ஆட்டோமொபைல் இன்ஜினியர் ஆகவேண்டும், ஒரு ஒர்க்ஷாப் தொடங்கவேண்டும் என்பது ஆசை. மேலும் பைக் மற்றும் கார் மீது அதிகம் ஆர்வம் இருக்கிறது. சென்னை மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தில் கிட்டத்தட்ட 6 மாதங்கள் வேலை பார்த்திருந்தேன். அப்போது நான் மெக்கானிக்காக இருப்பது எனது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷிற்கு குடிப்பழக்கம் இருக்கா? எனக்கு தெரிந்தவரை அந்த பழக்கம் இருக்கு – ரகசியம் பகிர்ந்த சமந்தா!
பின் ஒரு அரசு நிறுவனத்தில் 4 வருடங்களுக்கும் மேல் வேலைப் பார்த்தேன். அதன் பிறகு சொந்தமாக பிஸினஸை தொடங்கினேன். நான் சினிமாவிற்கு வந்தது முற்றிலும் எதிர்ச்சியாக நடந்தது. மேலும் எப்போதாவது நானே ஒரு சொந்தமாக ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்குவேன் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸ் அட்டவணை குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
From the desk of Ajith Kumar Racing comes the official Ajith Redant Racing Calendar 2026–27. 🏁🔥
A new season. New challenges. One passion for speed.
Gear up for an electrifying year of racing as the journey continues on tracks across the world. 🏎️💨#AjithKumar… pic.twitter.com/VrdqW3awFy— Ajithkumar Racing (@Akracingoffl) March 16, 2026
நடிகர் அஜித் குமார் தற்போது கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேல எந்த படங்களிலுமே நடிக்கவில்லை. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AK64 என்ற படத்தில் நடிப்பத்க் கூறப்பட்ட நிலையில், இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கவில்லை. ஆனால் அஜித் குமார் 2026 – 2027ம் ஆண்டுவரை கார் ரேஸில் கலந்துகொள்வதாக அட்டவணையை வெளியிட்டுள்ளார். இதற்க்கு இடையே AK64 பட ஷூட்டிங் நடக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.