Ajith: ஒரு காவியக் காதல் கதை.. ரீ- ரிலீஸாகும் அஜித் -ஷாலினியின் அமர்க்களம் திரைப்படம் – எப்போது தெரியுமா?

Amarkkalam Re-release: கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் தற்போது பிரபல காதல் ஜோடிகளாக புகழப்படுபவர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி. இவர்கள் இருவருமே முதல் முதலில் இணைந்து நடித்திருந்த படம்தான் அமர்க்களம். இப்படம் வெளியாகி 26 வருடங்களை கடந்த நிலையில், ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Ajith: ஒரு காவியக் காதல் கதை.. ரீ- ரிலீஸாகும் அஜித் -ஷாலினியின் அமர்க்களம் திரைப்படம் - எப்போது தெரியுமா?

அமர்க்களம் திரைப்படம்

Updated On: 

11 Apr 2026 20:07 PM

 IST

தமிழில் பேமஸ் நாயகனாக தற்போதுவரையிலும் இருந்துவருபவர் நடிகர் அஜித் குமார் (Ajith kumar). இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற திரைப்படமானது சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ரூ200 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக தற்போது முழுவதுமாக ரேஸில் கலந்துகொண்டு வருகிறார். மேலும் அவ்வப்போது தனது மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித் குமாருடன் நேரத்தை செலவு செய்துவருகிறார். நடிகை ஷாலினி (Shalini) தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரம் மற்றும் நடிகையாக நடித்து அசத்திவந்தவர். இவரும் நடிகர் அஜித் குமாரும் ஒன்றாக திரைப்படத்தில் இணைந்த நடித்த நிலையில், அதிலிருந்து காதல் தொடங்கி திருமணத்தில் முடிந்தது.

அந்த வகையில் இவர்கள் இருவருமே இணைந்து நடித்த முதல் திரைப்படம் அமர்க்களம் (Amarkkalam). கடந்த 1999ம் ஆண்டில் இயக்குநர் சரண் (Director Saran) இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்றிருந்தது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டுடன் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், படக்குழு ரீ- ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா? 18 ஆண்டுகளை நிறைவு செய்தது சந்தோஷ் சுப்ரமணியம் படம்

அஜித் குமார் மற்றும் ஷாலினியின் அமர்க்களம் திரைப்பட ரீ- ரிலீஸ் :

இயக்குநர் சரணின் இயக்கத்தில், அஜித் குமார் மற்றும் ஷாலினி இணைந்து நடித்திருந்த காதல் திரைப்படம்தான் அமர்க்களம். இப்படம் கடந்த 1999ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திலிருந்துதான் அஜித் குமார் மற்றும் ஷாலினி காதலிக்க தொடங்கியிருந்தனர்.

இதையும் படிங்க: தி பாரடைஸ் படத்தில் எனது ரோல் வித்தியாசமாக இருக்கும் – கயாடு லோஹர்

இப்படமானது முழுக்க காதல், ஆக்ஷன், எமோஷனல் போன்ற கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 24ம் தேதியில் உலகமெங்கும் ரீ- ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இதுகுறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

அஜித் குமாரின் அமர்க்களம் திரைப்படத்தின் ரீ- ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்த பதிவு:

வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதியில் கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. தளபதி விஜய்யின் சிவகாசி திரைப்படம், ஆர்.மாதவனின் ரன் மற்றும் அஜித் குமாரின் அமர்க்களம் என மொத்தம் 3 திரைப்படங்கள் ஒரே நாளில் ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?