அரசன் படத்திற்கு பிறகு சிலம்பரசன் எந்தப் படத்தில் நடிப்பார் தெரியுமா? வைரலாகும் தகவல்
Silambarasan Movie Update: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் அரசன். இந்தப் படத்தின் பணிகளில் அவர் பிசியாக இருக்கும் நிலையில் அடுத்ததாக எந்த இயக்குநரின் படத்தில் சிம்பு நடிக்க உள்ளார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனின் படங்கள் என்றால் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இப்போதும் நடிகர் சிம்பு குழந்தையில் நடித்த படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினார் ரசிகர்கள் அதனை ஆர்வத்துடன் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் அனைத்தும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்னதாக உடல் எடை அதிகரித்து பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்குவது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறனை தொடர்ந்து அஸ்வத் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு:
இந்த நிலையில் அரசன் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வரும் சிம்பு அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அளித்தப் பேட்டியில் அடுத்ததாக் நடிகர் சிம்பு நடிக்க உள்ள படத்தின் கதையை எழுதி வருவதாக தெரிவித்து இருந்த நிலையில் இந்த செய்தி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… திரையரங்குகளில் வெற்றிநடைப் போடும் சிறை படம்… கொண்டாடும் படக்குழுவினர்
இணையத்தில் வைரலாகும் எஸ் தள பதிவு:
— After #Arasan, #SilambarasanTR will next be seen in #STR51, directed by Ashwath Marimuthu.
— It has been reported that the shooting of this film will begin in April.
— This movie is supposed to be a fantasy love movie. “#GodOfLove” pic.twitter.com/KMHDQJEmS5— Movie Tamil (@_MovieTamil) January 19, 2026
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் என்னெல்லாம் நடந்தது… ரீகேப் இதோ