பராசக்தி படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் நடிகை ஸ்ரீ லீலா – வைரலாகும் வீடியோ
Actress Sreeleela: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பராசக்தி படம். இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக ஒரு விசயத்தை செய்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

ஸ்ரீ லீலா
தெலுங்கு சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் நடிகை ஸ்ரீ லீலா. அதனைத் தொடர்ந்து கன்னட சினிமாவில் வெளியான கிஸ் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை ஸ்ரீ லீலா. தொடர்ந்து இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இளம் வயதுடைய இந்த நடிகை தற்போது பல சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து வருவது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இது மட்டும் இன்றி நடிகை ஸ்ரீ லீலாவின் நடனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவிலும் அறிமுகம் ஆகிறார் நடிகை ஸ்ரீ லீலா. அதன்படி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்து வருகிறார்.
அதன்படி இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் பராசக்தி. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் நிலையில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ள நிலையில் நடிகர்கள் அதர்வா முரளி, ராணா டகுபதி, பேசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
பராசக்தி படத்தில் டப்பிங் பணியை தொடங்கிய ஸ்ரீ லீலா:
அதன்படி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணியை முடித்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரீ லீலா பராசக்தி படத்தில் தனது கதாப்பாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளார். அதன்படி படம் வருகின்ற 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.
Also Read… ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் ரிலீஸ் எப்போது? மாஸான ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு