துல்கர் சல்மானின் ஐம் கேம் படத்தில் இணைந்த நடிகை கயடு லோஹர்
I'M GAME Movie: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஐம் கேம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிகை கயடு லோஹர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை கயடு லோஹர்
கடந்த 2021-ம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன நடிகை கயடு லோஹர் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை கயடு லோஹர். இவர் தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ட்ராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கயடு லோஹர் அடுத்தடுத்து தமிழ் படங்களில் வரிசையாக கமிட்டானார். தமிழ் சினிமாவில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகி உள்ள நடிகை கயடு லோஹர் மலையாள சினிமாவில் இரண்டு படங்களும் தெலுங்கு சினிமாவில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை கயடு லோஹர்.
தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வாவுடன் இதயம் முரளி, ஜிவி பிரகாஷ் உடன் இம்மார்ட்டல், சிலம்பரசன் உடன் அவரது 49-வது படத்திலும் நடிகை கயடு லோஹர் நாயகியாக நடித்து உள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஐம் கேம் படத்தில் நடிகை கயடு லோஹர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஐம் கேம் படத்தில் இணைந்த நடிகை கயடு லோஹர்:
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் காந்தா. பீரியட் ட்ராமாவாக வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இவர் ஐம் கேம் படத்தில் நடிப்பதாக சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். அந்தப் போஸ்டரில் நடிகர் துல்கரின் லுக்கை பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிலையில் இன்று இந்தப் படத்தில் நடிகை கயடு லோஹர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ஐம் கேமிற்கு பிரகாசத்தை சேர்க்கிறது. கயடு லோஹர் என்ற அழகை வரவேற்பதில் மகிழ்ச்சி என்றும் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தனர்.
Also Read… 2025-ம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் ஹிட் கொடுத்த அறிமுக இயக்குநர்கள் லிஸ்ட்
ஐம் கேம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Adding sparkle to #ImGame 🧚♀️ – thrilled to welcome the gorgeous #KayaduLohar! 💖@NAHASKh1 @VarghesePepe @am_kathir @iamSandy_Off @DirectorMysskin @samyukthavv @11Lohar @anbariv @jakes_bejoy @ImGameMovie @DQsWayfarerFilm #DulquerSalmaan #NahasHidayath #AntonyVarghese
#dQ40… pic.twitter.com/RXPib4RMQ1— Wayfarer Films (@DQsWayfarerFilm) December 18, 2025
Also Read… நஸ்லேனின் ஜர்னி ஆஃப் லவ் 18+ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்