’உங்களுக்கு வெறுப்பு’ – ரஹ்மானை குற்றம்சாட்டிய கங்கனா ரனாவத்.. என்ன நடந்தது?
Actress Kangana Ranaut : பாலிவுட் சினிமாவில் நாயகியாகவும் எம்பியாகவும் வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பேசியது தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. என்ன நடந்தது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

கங்கனா ரனாவத், ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தனது இசையில் வெளியாகும் பாடல்களால் பிரபலமாகி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி காரணமாக பேசுபொருளாகியுள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இசையமைப்பாளராக தான் செய்த மெனக்கெடல்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் அவர் அளித்தப் பேட்டியில் செய்தியாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேள்வி எழுப்புகிறார். அதில், இந்தி சினிமாவில் வெளியான சாவா படம் குறித்து கேள்வி எழுப்பட்டது. செய்தியாளர் அந்தப் படத்தை குறிப்பிடும் போதே பிரிவிணைவாத படம் என்று கூறுகையில் ஆம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகிறார்.
மேலும் அந்தப் படம் பிரிவிணைவாதத்தை பேசி சம்பாதித்து இருந்தாலும் அந்தப் படம் வீரத்தை காட்டுவது மையக்கருவாக நான் நினைக்கிறேன் என்று வெளிப்படையாக பேசி இருந்தார். இந்த கருத்து சினிமா வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகையும் எம்பியுமான கங்கனா ரனாவத் பேசியுள்ளார்.
ரஹ்மானை குற்றம்சாட்டிய கங்கனா ரனாவத்:
அன்புள்ள அர்ரஹ்மான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் நான் அதிக அளவு பாரபட்சத்தை எதிர்கொள்கிறேன், ஆனால் உங்களை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை என்று நான் கூற வேண்டும்.
நான் இயக்கி நடித்த எமர்ஜென்சி படம் குறித்து உங்களுக்கு விவரிக்க விரும்பினேன். படம் குறித்து பேசுவதை கூட விட்டுவிடலாம், நீங்கள் என்னை சந்திக்க கூட மறுத்துவிட்டீர்கள். நீங்கள் பிரச்சாரப் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று கூறியதாக என்னிடம் கூறப்பட்டது.
ஆனால், எமர்ஜென்சி படம் அனைத்து விமர்சகர்களாலும் ஒரு தலைசிறந்த படைப்பு என்று அழைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட படத்தின் சமநிலையான மற்றும் அதை நான் அணுகிய விதத்தையும் பாராட்டி எனக்கு கடிதங்களை அனுப்பினர். ஆனால் உங்கள் வெறுப்பால் நீங்கள் கண்மூடித்தனமாக இருக்கிறீர்கள். உங்களுக்காக நான் வருந்துகிறேன் என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
Also Read… Soori: மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும்- ரசிகருக்கு தக்க பதிலளித்த சூரி!
இணையத்தில் வைரலாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் பேச்சு:
🚨 SHOCKING STATEMENT BY A.R RAHMAN
“Chhaava is a divisive film, it cashed on divisiveness. Urdu was the mother of Hindi film music in 1960s and 1970s”
“I have stopped getting work bcoz of shift in Power in India 🇮🇳”#ARRahman #Chhaava pic.twitter.com/s6CxfvFtGN
— Kushal Sharma (@KushalSharma_89) January 17, 2026
Also Read… துபாய் கார் ரேஸ் களத்தில் அஜித் குமாரை சந்தித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா!