சினிமாவில் 26 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பூரி ஜெகன்நாத்… நெகிழ்ந்து பேசிய விஜய் சேதுபதி!
Actor Vijay Sethupathi talks about director Puri Jagannadh: தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பூரி ஜெகன்நாத். இவர் சினிமாவில் 26 ஆண்டுகளை நிறைவு செய்ததை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டு கொண்டாடி வருகிறார்.

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத்
தெலுங்கு சினிமாவில் கடந்த 2000 ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பத்ரி. இந்தப் படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் அவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாண் நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் தொடர்ந்து கன்னடா, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் பூரி ஜெகன்நாத் நடிகர் விஜய் சேதுபதியின் படத்தை எழுதி இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சினிமாவில் அறிமுகம் ஆகி 26 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனை விஜய் சேதுபடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்.
இந்த மனிதருக்கு இது எத்தகையதொரு பயணமாக அமைந்திருக்கிறது:
இந்த மனிதருக்கு இது எப்பேர்ப்பட்ட பயணமாக இருந்திருக்கிறது. சினிமாவில் 26 ஆண்டுகள் என்பது வெறும் ஒரு மைல்கல் மட்டுமல்ல, அது துணிச்சல், உறுதி மற்றும் அச்சமற்ற குரலால் கட்டமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியம். அன்புள்ள பூரி சார், ஸ்லம்டாக் – 33 டெம்பிள் ரோடு படத்தில் உங்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. நடிகர்களாகிய நாங்கள், எங்களை நம்பி, எங்களின் இயல்பான எல்லையைத் தாண்டிச் செல்லத் தூண்டும் இயக்குநர்களையே எப்போதும் தேடுகிறோம். நீங்கள் அதை மிக எளிதாகச் செய்கிறீர்கள். இதில் சம்பந்தப்பட்ட எங்கள் அனைவருக்கும் இது ஒரு மிகச் சிறப்பான படமாக நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் தொடர் வெற்றிக்கும், இன்னும் பல ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் கதைசொல்லலுக்கும் வாழ்த்துகிறேன் என்றும் மரியாதை என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமை பெற்ற பிரபல நிறுவனம்? அட இத்தனை கோடியா?
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
What a journey it has been for this Man 🙏🏻🙏🏻🙏🏻
26 years in cinema is not just a milestone, it’s a legacy built with courage, conviction, and a fearless voice.
Dear Puri sir, it was an absolute pleasure working with you on #SLUMDOG – 33 Temple Road. As actors, we always look… pic.twitter.com/XJ9NM1fWv2
— VijaySethupathi (@VijaySethuOffl) April 20, 2026
Also Read… காட்டாளன் படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட அனிருத் – வைரலாகும் வீடியோ