மாமன் படத்தின் ஓடிடி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம் – அப்டேட் இதோ!
Maaman Movie OTT Update: நடிகர் சூரியின் நாயகனாக நடித்து தற்போது வெளியிட்டிற்கு காத்திருக்கும் படம் மாமன். குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை பாகம் இரண்டு. இந்தப் படத்திற்கு திரையரங்குகளில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி (Actor Soori) நாயகனாக நடிக்க ஒப்பந்தமான படம் மாமன். தொடர்ந்து இறுக்கமான படங்களில் நடித்து வந்த நடிகர் சூரி மிகவும் ஜாலியான படத்தின் நடிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதனால் அவர் பல இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளார். இறுதியாக இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகர் சூரியை சந்தித்து கதை கூறியுள்ளார். அந்த கதையில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாத நடிகர் சூரி இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதை இயக்குநருக்கு பிடிக்க அதனை இயக்க அவர் ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தில் நடிகர் சூரிக்கு நாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரன், சுவாசிகா, பாபா பாஸ்கர், பிரகீத் சிவன், பால சரவணன், ஜெய பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயாதேவி, நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மெல்வின், திருச்சி அனந்தி, சாவித்திரி, சாரதா, தமிழ்செல்வி, ரயில் ரவி, உமேஷ் காந்த் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இவர் முன்னதாக நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் வெளியான ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதனைப் பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஃபேமிலி செண்டிமெண்ட் படம் வெளியாகவுள்ளது என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
It’s official! @ZeeTamil secures the satellite rights and @ZEE5Tamil the digital rights for #Maaman 📺💻
Directed by @p_santh
A @HeshamAWmusic Musical
Produced by @kumarkarupannan @larkstudios1@AishuL #Swasika #RajKiran #JayaPrakash @Bala_actor #BabaBaskar… pic.twitter.com/U85iwMKqzV— Actor Soori (@sooriofficial) May 8, 2025
படம் வருகின்ற 16-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு பிறகு எந்த ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படம் திரையரங்க வெளியீட்டிற்கு பிறகு ஜீ 5 ஓடிடியில் வெளியாகவுள்ளது என்று சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.