Pradeep Rangnathan : பீக்கில் பிரதீப் ரங்கநாதன்… அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் இரண்டும் படங்கள்!
LIK Vs Dude : தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் டிராகன். அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படமும், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகிறது, அது குறித்துப் பார்க்கலாம்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) கூட்டணியில் உருவாகியுள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த திரைப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி (Krithi Shetty)நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதனின் இந்த படத்தின் கதைக்களமானது அறிவியல் புனைகதைகளுடன் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் அப்பாவும் மகனும், கடந்த காலத்தில் ஒரே பெண்ணை காதல் செய்வது போல் இந்த படத்தின் கதைக்களமானது இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங்கானது டிராகன் படத்தைத் தொடர்ந்து ஆரம்பமானது. இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், கிருத்தி ஷெட்டி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2025 , செப்டம்பர் 18ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் அருமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வெளியிட்ட ஏக்ஸ் பதிவு :
#LIK from Sep 18 pic.twitter.com/Gy8PUHqRMM
— Pradeep Ranganathan (@pradeeponelife) May 12, 2025
டியூட் திரைப்படம் :
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகிவரும் படம் டியூட். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பூஜைகள் கடந்த 2025, மார்ச் மத்தில் நடந்த நிலையில், அதை தொடர்ந்து ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை குட் பேட் அக்லி படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்தது வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மலையாள பிரபல நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் சரத்குமார், ஹிருத்து ஹூரான் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.
டியூட் படக்குழு வெளியிட்ட பதிவு :
Make way for the ‘DUDE’, coming to entertain you all BIG TIME 💥💥#PR04 is #DUDE ❤🔥
All set for a MASSIVE DIWALI 2025 RELEASE 💥💥
In Tamil, Telugu, Hindi, KannadaWritten and directed by talented @Keerthiswaran_
A sensational @SaiAbhyankkar musical
Produced by… pic.twitter.com/6S2t1bOXHi— Pradeep Ranganathan (@pradeeponelife) May 10, 2025
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் இந்த படமானது முற்றிலும் காதல் கலந்த காமெடி படமாக உருவாகிவருகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இப்ரதீப் ரங்கநாதனின் 4வது திரைப்படமான டியூட் படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதி தொடர்ந்து இந்த படமானது வரும் 2025ம் ஆண்டு தீபாவளி பண்டியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாம்.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது 2025, செப்டம்பர் 18ம் தேதியில் வெளியாகிற நிலையில், அதைத் தொடர்ந்து அடுத்த மாதமான அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த டியூட் படமும் வெளியாகிறது. இந்நிலையில், 2025ம் ஆண்டில் மட்டும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் 3 படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்தடுத்த மாதங்களில் 2 படங்கள் வெளியாகின்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.