தோ கிலோமீட்டர்… தோ கிலோமீட்டர்… 8 ஆண்டுகளை நிறைவு செய்தது தீரன் அதிகாரம் ஒன்று படம்!

8 Years Of Theeran Adhigaaram Ondru: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தோ கிலோமீட்டர்... தோ கிலோமீட்டர்... 8 ஆண்டுகளை நிறைவு செய்தது தீரன் அதிகாரம் ஒன்று படம்!

தீரன் அதிகாரம் ஒன்று

Published: 

17 Nov 2025 17:18 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 17-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தீரன் அதிகாரம் ஒன்று. இயக்குநர் எச்.வினோத் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இவர் தற்போது நடிகர் தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் தற்போது 8 வருடங்களைக் கடந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட், பிரவீணா, மனோபாலா, கல்யாணி நடராஜன், சத்யன், சோனியா, பிரதீப் ராயன், ஆர்.என்.ஆர்.மனோகர், அபிராமி, கிஷோர் கதம், மேத்யூ வர்கீஸ், விக்னேஷ் விஜயன், ரோஹித் பதக், நாரா ஸ்ரீனிவாஸ், சுரேந்தர் தாக்கூர், பிரயாஸ் மான், ஜமீல் கான், டிஎஸ்ஆர் சீனிவாசன், ஸ்கார்லெட் மெல்லிஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ராம் இசைமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை என்ன?

காவல்துறை அதிகாரியாக இருக்கும் நடிகர் கார்த்தி தொடர்ந்து வெளி மாநிலத்தவர்களால் தனியாக இருக்கும் வீட்டில் கொலை மற்றும் கொலைகள் நடைபெறுவதை விசாரித்து வருகிறார். அப்படி அவர் விசாரித்து வரும் போது வடக்குப் பகுதியில் இருந்து வரும் ஒரு கும்பல் பகல் நேரத்தில் போர்வைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வது போல வீட்டில் தனியாக இருப்பவர்கள் மற்றும் ஆட்கள் இல்லாமல் இருக்கும் வீடுகளை குறிவைக்கின்றனர். இப்படி தொடர் கொலை மற்றும் கொல்லையில் ஈடுபட்டவர்களை கார்த்தி எப்படி கண்டுபிடித்தார் என்பதே படத்தின் கதை.

Also Read… பிக்பாஸில் என்னோட காம்பெடிஷன் இவர் தான் – பார்வதி சொன்னது யார் தெரியுமா?

தீரன் அதிகாரம் ஒன்று படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்

துல்கர் சல்மானின் காந்தா படம் எப்படி இருக்கு?
பிளாஸ்டிக் பாத்திரங்களில் நிறைந்திருக்கும் அபாயம்
நியூயார்க்கை சுற்றி வரும் அனிருத் - காவ்யா மாறன்
ரஷ்யா கல்லூரியில் படிக்க விரும்புகிறீர்களா? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்!