பெரிய இயக்குநர் இயக்கத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன் – ஜோஜூ ஜார்ஜ் சொன்ன விசயம்

Actor Joju George: மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் அவ்வபோது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரின் இயக்கத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெரிய இயக்குநர் இயக்கத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன் - ஜோஜூ ஜார்ஜ் சொன்ன விசயம்

ஜோஜூ ஜார்ஜ்

Published: 

20 Sep 2025 15:55 PM

 IST

மலையாள சினிமாவில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார். இவர் மலையாள சினிமாவில் வில்லன், நாயகன், சிறப்பு கதாப்பாத்திரம் என தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான படம் மலையாளத்தில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான ஜோசஃப், ஜூன், பொரிஞ்சு மரியம் ஜோஸ், சோழா, நயாட்டு, ஸ்டார், மதுரம், ஒரு தத்விகா அவலோகனம், பட, அவியல், சொலமண்டே தேனீக்கள், இரட்டை, புலிமட, ஆண்டனி, பணி, நாராயணீண்டே மூண்ணாண்மக்கள் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இவரது நடிப்பி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்ற நிலையில் அடுத்ததாக இவர் தமிழ் சினிமாவில் புத்தம் புது கலை, பஃபூன், ரெட்ரோ மற்றும் தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இறுதியாக தக் லைஃப் படத்தில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக இந்த தக் லைஃப் படத்தில் நடித்ததற்காக கமல் ஹாசன் ஜோஜு ஜார்ஜ் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகு வருகின்றது.

மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் ஜோஜூ ஜார்ஜ்:

அந்தப் பேட்டியில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் பேசியதாவது, நான் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளேன். அதன்படி பெரிய இயக்குநர்தான் அந்தப் படத்தை இயக்க உள்ளார். இதில் நான் முன்னணி வேடத்தில் நடிக்கிறேன் என்று நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Also Read… கமல் சார் கூட நடிக்கும் போது அந்த சீன்ல பயந்து அழுதுட்டேன் – நடிகை மீனா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

இணையத்தில் கவனம் பெறும் ஜோஜூ ஜார்ஜ் வீடியோ:

Also Read… குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் செய்த சம்பவம் – நெகிழ்ந்து பேசிய நடிகை