கூட்டத்தில் பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்… விசாரணையில் இறங்கிய போலீஸ்!
Nidhhi Agerwal Mobbed: தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நிதி அகர்வால். இவர் நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் 2வது பாடல் ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில், அந்த கூட்டத்தில் நடிகை நிதி அகர்வாலிடம் ரசிகர்கள் சில அத்துமீறியுள்ளனர். இது தொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிதி அகர்வால்
தெலுங்கு சினிமாவில் தற்போது பிரம்மாண்ட நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து ஹிட் படங்களை கொடுத்துவருபவர் நிதி அகர்வால் (Nidhhi Agerwal). இவர் நடிகர் பிரபாஸின் (Prabhas) தி ராஜா சாப் (The Raja Saab) படத்தில் முக்கிய நடிகையாக நடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 17ம் தேதியில் இப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் (Hyderabad) உள்ள லூலூ மாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டிருந்த நிலையில், பிரபாஸ் கலந்துகொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வெளியேரிய நடிகை நிதி அகர்வாலை சுற்றி ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே சூழ்ந்துவிட்டனர். இதில் பலரும் நடிகை நிதி அகர்வாலிடம் அத்துமீறி நடந்துகொண்டனர். தொடர்ந்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, ராஜா சப் படக்குழுவினர் அவரை பத்திரமாக காரில் ஏற்றினர். இதில் நிதி அகர்வாலின் உடைகள் கலைந்த நிலையில், அவர் காரில் ஏறியதும் அதனை சரிசெய்ததோடு, ரசிகர்களை பார்த்து கோபமாகவும் முகபாவனை வைத்திருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் இதுகுறித்து பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பிவந்த நிலையில், இந்த நிகழ்வு குறித்து போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறதாம்.
இதையும் படிங்க: ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ஷூட்டிங் ஓவர்.. முதல் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
கூட்ட நெரிசனில் நடிகை சிக்கிக்கொண்டது குறித்து வைரலாகும் வீடியோ :
Scary visuals of #NidhhiAgerwal being mobbed by fans at the #TheRajaSaab song launch.
A little common sense from the crowd would have made the situation better. pic.twitter.com/2kAv43zJ2Q
— Gulte (@GulteOfficial) December 17, 2025
நடிகை நிதி அகர்வால் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தமிழில் சிலம்பரசனின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பூமி மற்றும் காவியத்தலைவன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். அந்த வகையில் இவரின் நடிப்பில் 2025ல் வெளியாகி ஹிட் கொடுத்த படம் ஹரி ஹாரா வீர மல்லு. இதில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்திருந்தார்.
இதையும் படிங்க: அரசன் படத்தில் இணைந்தாரா ஆண்ட்ரியா? இன்ஸ்டாகிராம் பதிவால் ஹேப்பியில் ரசிகர்கள்!
இதையடுத்து தெலுங்கில் இவர் நடிக்கும் பிக் பட்ஜெட் படம்தான் தி ராஜா சாப். இதில் பிரபாஸுடன் மாளவிகா மோகனன், ரித்தி குமார் மற்றும் நிதி அகர்வால் என 3 நடிகளிகள் இணைந்து நடிக்கின்றனர். அதில் நிதி அகர்வால் முக்கியமான நடிகை என கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகிறது. இந்த படத்தின் 2வது பாடல் ரிலீஸ் நிகழ்ச்சியின்போதுதான், நிதி அகர்வாலிடம் ரசிகர்கள் கூட்டத்தில் அத்துமீறினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது .