65 ஆண்டுகளை நிறைவு செய்தது களத்தூர் கண்ணம்மா – கமல்ஹாசனுக்காக சிறப்பு வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

65 years of Kalathur Kannamma: நடிகர் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனப் படம் களத்தூர் கண்ணம்மா. இந்தப் படம் வெளியாகி தற்போது 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

65 ஆண்டுகளை நிறைவு செய்தது களத்தூர் கண்ணம்மா - கமல்ஹாசனுக்காக சிறப்பு வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

கமல் ஹாசன்

Published: 

11 Aug 2025 19:24 PM

தமிழ் சினிமாவில் கடந்த 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan). செல்வம் என்ற அனாதை குழந்தையாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் நடிகர் கமல் ஹாசன். தற்போது பல நூறு படங்களில் நடித்து தனது வெற்றியைப் பதிவு செய்து இருந்தாலும் களத்தூர் கண்ணம்மா படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலைப் மனம் உருகப் பாடும் குழந்தை நட்சத்திரமான கமல் ஹாசனை ரசிக்காத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். கடவுள் இல்லனு சொல்லல இருந்தா நல்லா இருக்கும் என்று தற்போது சொல்லும் கமல் ஹாசன் மனம் உருகி முருகா… முருகா என்று பாடியப் பாடலை தற்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக சினிமா ரசிகர்கள் உலக நாயகன் கமல் ஹாசன் என்று கொண்டாடப்படும் நபர் குழந்தையாக இருக்கும் போதே தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டது ஒன்றும் ஆச்சரியப்படும் விசயம் இல்லை என்றே அவரது ரசிகர்கள் கூறுவார்கள். சினிமாவிற்காகவே தனது வாழ்க்கையை அற்பணித்தவர் கமல் ஹாசன் என்றும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். சாதாரண மக்கள் மட்டும் இன்றி சினிமா பிரபலங்கள் பலரும் பார்த்து பிரம்பிப்பவராக நடிகர் கமல் ஹாசன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

65 வருடங்களை கடந்தது களத்தூர் கண்ணம்மா படம்:

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன களத்தூர் கண்ணம்மா படம் 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரடெக்‌ஷன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் கமல் ஹாசனின் களத்தூர் கண்ணம்மா வீடியோவைப் பகிர்ந்து படம் 65 ஆண்டுகளை நிறைவு செய்ததையும் அறிவித்துள்ளது.

அந்த வீடியோவில் படத்தின் நாயகன் ஜெமினி கணேஷன் சிறுவன் கமல் ஹாசனின் சிறப்பான நடிப்பை பாராட்டுவதையும் நாம் பார்க்கலாம். மேலும் படத்தில் இருந்து சில காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த வீடியோ தற்போது கமல் ஹாசனின் ரசிகர்களால் அதிகம் பகிறப்பட்டு வருகின்றது.

Also Read… LCU-விற்காக லியோ படத்தில் ஜார்ஜ் மரியான் கேரக்டர் திணிக்கப்பட்டதா? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

இணையத்தில் வைரலாகும் களத்தூர் கண்ணம்மா வீடியோ:

Also Read… பர்த்டே பேபி மாளவிகா மோகனனின் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சங்கள் தெரியுமா?