அமேசான் ப்ரைமில் இருக்கும் 3 BHK படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
3 BHK Movie Review: நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் 3 BHK. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

3 BHK படம்
கோலிவுட் சினிமாவில் நடிகர் சித்தார்த் (Actor Siddharth) நடிப்பில் வெளியாகும் குடும்ப செண்டிமெண்ட் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 3 BHK. நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் சரத்குமார் (Actor Sarathkumar), தேவயானி, மீத்தா ரகுநாத், சைத்ரா ஜே ஆச்சார், விவேக் பிரசன்னா, யோகி பாபு மற்றும் தலைவாசல் விஜய் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான எட்டு தோட்டாக்கள் மற்றும் குறுதி ஆட்டம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவ்னாமன ஷாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரித்து இருந்தார். இந்த உலகில் வாழும் பெரும்பான்மையான மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கனவைப் பற்றி வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அமேசானில் உள்ள 3 BHK படத்தின் கதை என்ன?
சரத்குமார் மற்றும் தேவயானி தம்பதியின் இரண்டு பிள்ளைகள் தான் சித்தார்த் மற்றும் மீத்தா ரகுநாத். மிடில் கிளாஸ் குடும்பஸ்தனாக இருக்கும் சரத்குமாருக்கு எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாக உள்ளது. இதன் காரணமாகவே தனது மாத வருமானத்தில் குடும்ப செலவுகளை கட்டுப்படுத்தி பணத்தை சேர்த்து வருகிறார். மேலும் இரண்டு பிள்ளைகளில் மகனை பணம் கட்டிப் படிக்கும் பெரிய பள்ளியிலும் மகளை அரசுப் பள்ளியிலும் படிக்க வைக்கிறார்.
பெரிய பள்ளியில் படிக்கும் சித்தார்த் எவ்வளவு முயற்சி செய்தும் தேர்வில் அவரால் போதிய மதிப்பெண்களை பெறமுடியவில்லை. ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும் அவரது தங்கை மீத்தா ரகுநாத் நல்ல மதிப்பெண்களைப் பெற்று நன்றாக படித்து வருகிறார். ஒரு கட்டத்தில் காசு சேர்த்து வீடு வாங்கிவிடலாம் என்று நினைக்கையில் பள்ளி முடித்த மகன் கல்லூரியில் சேரவேண்டும் என்பதற்காக வீட்டிற்காக வைத்து இருந்த பணத்தை கல்லூரி கட்டணத்திற்கு பயண்படுத்துகிறார் சரத்குமார்.
Also Read… ராஞ்சனா படத்தின் ரீ ரிலீஸில் ஏஐ க்ளமேக்ஸ் என்னை மிகவும் வருத்தமடைய செய்தது – தனுஷ்!
அதனைத் தொடர்ந்து எப்படியோ தட்டுத்தடுமாறி கல்லூரி முடித்து வேலை தேடும் சித்தார்த்திற்கு மிகவும் சிரமப்பட்டு ஒரு வேலை கிடைக்கிறது. அதே போல மீத்தா ரகுநாத்திற்கும் ஒரு வேலை கிடைக்கிறது. இவர்கள் இருவரும் வேலை செய்யும் அலுவலகத்தில் லோன் எடுத்து வீடு வாங்க முடிவு செய்யும் வேலையில் மீத்தாவிற்கு நல்ல வரன் வருகிறது என்று அந்த பணத்தை வைத்து திருமணத்தை முடித்து விடுகின்றனர்.
அதே நேரத்தில் நடிகர் சித்தார்த்தும் தான் காதலித்த பெண்ணை தனது தந்தை சரத்குமாரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொள்கிறார். இந்த சூழலில் கட்டிக்கொடுத்த இடத்தில் கொடுமை நடக்கிறது என்று மீத்தா தனது பெற்றோர்கள் வீட்டிற்கு தனது குழந்தையுடன் வந்துவிடுகிறார். இதனைத் தொடர்ந்து அவர்கள் எப்படி வீடு கட்டினார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… திருமணம் குறித்து யோசிச்சாலே பயமா இருக்கு – நடிகை ஸ்ருதி ஹாசன்!
3 BHK படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Our Film #3BHK enters ur Homes from now ☺️❤️ You can all watch it on Amazon Prime @PrimeVideoIN!!!
We hope to reach many more People & their Hearts ❤️ #3BHKONPrime #Siddharth @realsarathkumar @ShanthiTalkies #Devayani @RaghunathMeetha @Chaithra_Achar_ @iamarunviswa… pic.twitter.com/2zFUYUdmls
— Sri Ganesh (@sri_sriganesh89) August 1, 2025