விஜய் அமைச்சரவையில் யார்.. யார்.. இடம் பெறுவார்? தவெக பதவியேற்பு விழா எப்போது!

TVK leader Vijay Cabinet: தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பதிவு செய்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யார்.. யார்.. இடம் பெறுவார். விஜயுடன் சேர்த்து அமைச்சரவையும் பதவியேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் அமைச்சரவையில் யார்.. யார்.. இடம் பெறுவார்? தவெக பதவியேற்பு விழா எப்போது!

வழிநெடுகிலும் காத்திருந்த மக்கள்.. காரில் இருந்து கையசத்த தவெக தலைவர் விஜய்..

Updated On: 

05 May 2026 21:31 PM

 IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 1.50 கோடிக்கும் மேலான வாக்குகள் பெற்றதுடன், 34.8 சதவீத வாக்குகளுடன், 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருந்தாலும், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு 118 சட்டமன்ற தொகுதிகள் தேவைப்படும் நிலை உள்ளது. இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் தமிழக வெற்றி கழகம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரியும், இரு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க இருப்பதாகவும் தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சார்பில் மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக ஆளுநர் சட்ட வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது.

மே 7- இல் பதவி ஏற்கிறாரா தவெக தலைவர் விஜய்

இது தொடர்பாக நாளை ஆளுநர் விஸ்வநாத்தை சந்தித்து தவெக தலைவர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வருகிற மே 7- ஆம் தேதி ( வியாழக்கிழமை) தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக பதவி ஏற்பார் எனவும், இதற்கான நிகழ்ச்சி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், அவருடன் சேர்த்து புதிய அமைச்சரவையும் பதவி ஏற்குமா அல்லது வேறொறு நாளில் பதவி ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: மே 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் விஜய்? இணையத்தில் வைரலாகும் GOAT பட காட்சி..

விஜய் அமைச்சரவையில் யார்.. யார்.. இடம் பெறுவார்

இதனிடையே, ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், புதிய அமைச்சரவையில் இடம் பெறுவோர் குறித்தும் தவெக தலைவர் விஜய் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பெண் உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு

இதே போல, திருப்பூர் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா, விஜயலட்சுமி உள்ளிட்ட பெண் உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம் என்றும், பிரச்சார பிரிவு பொதுச் செயலாளர் அருண்ராஜ், விஜய் சரவணன், முகமது பர்வேஷ், தமிழன் பார்த்திபன், கல்லாண் உள்ளிட்டவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை ஆளுநர் விடுக்கும் நிலையில், நேரு உள்விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்.. ஓமன் டூ திருப்பத்தூர் வந்த நபரின் பதிவு வைரல்!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..