தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் ஒரே அளவில் வாக்குகளை பெற்றால் என்ன ஆகும்?

Two Candidates Gets Same Numbers Of Votes In Election | இந்தியாவில் பல வகையான தேர்தல்கள் நடத்தப்படும். இந்த நிலையில், தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் ஒரெ அளவிலான வாக்குகளை பெற்றால் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் ஒரே அளவில் வாக்குகளை பெற்றால் என்ன ஆகும்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Mar 2026 21:45 PM

 IST

இந்தியாவை (India) பொருத்தவரை மாநில அளவில் சட்டமன்ற தேர்தல் (Assembly Election), இந்திய அளவில் நாடாளும்னற தேர்தல் (Parliament Election), கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் என பல வகையான தேர்தல்கள் நடத்தபட்டு தலைவர்கள் தேர்வு செய்யப்பகின்றனர். இதற்கான தனி விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில், ஒரு தொகுதியில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுமே ஒரே அளவிலாக வாக்குகளை பெற்றால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள்

இந்தியாவில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். கட்சிகளின் சார்பில், சுயேட்சியாக என ஒரு தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இருப்பார்கள். ஒருவேளை அந்த தொகுதியில் ஒரே ஒரு நபர் மட்டுமே போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து போட்டியிட வேறு ஒருவரும் இல்லை என்றால் அந்த நபர் போட்டி இன்றி தேர்வு செய்யப்படுவார்.

இதையும் படிங்க : வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் – முதல்வர் ஸ்டாலின்

இதுவே ஒரு தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர் என்றால் அந்த அனைத்து போட்டியாளர்களின் வாக்குகளும் கணக்கிடப்படும். அதில் யார் அதிக வாக்குகள் பெற்றாரோ அவரே அந்த தொகுதியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ஒரே ஒரு வாக்கு வித்தியாசம் என்றாலும் கூட அந்த ஒரு வாக்கு அதிகம் பெற்றவரே வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.

இரண்டு வேட்பாளர்கள் ஒரே அளவிலான வாக்கை பெற்றால் என்ன ஆகும்?

வெற்றியாளர்கள் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நிலையில், இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்கள் ஒரே அளவிலான வாக்குகளை பெற்றால் என்ன நடக்கும் என்ற கேள்வி உள்ளது. அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே அளவிலான வாக்குகளை பெறும் போது வெற்றியை தீர்மானிக்க குலுக்கல் முறை பயன்படுத்தப்படும்.

இதையும் படிங்க : செயற்பாட்டு வரைவு 2026.. நாளை வெளியிடப்படும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

மக்கள் பிரதிரித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 102 மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் படி, தேர்தல் நடத்தும் அதிகாரி இந்த முறையை பின்பற்றி வெற்றியாளரை அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்