நெரிசலில் சிக்காமல் சென்னை திரும்பனுமா? இந்த விஷயங்களை கொஞ்சம் பிளான் பண்ணுங்க!
Public Return To Chennai : தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்ற பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சென்னை திரும்புவதற்கு என்ன செய்யலாம் என்ற விவரத்தை இந்த ப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

சென்னைக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வது எப்படி
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதில், சென்னையில் இருந்து அதிகபட்சமாக 19.50 லட்சம் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இவர்களில் பலர் போதிய சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இல்லாத காரணத்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக காத்துக் கிடக்கும் சூழல் உருவானது. சில இடங்களில் போதிய பேருந்துகளை இயக்க கோரி போராட்டமும் நடைபெற்று இருந்தது. இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு திரும்பிய பொதுமக்கள், ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26) முதல் தங்களது ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு திரும்புவதற்கு திட்டமிட்டு இருப்பார்கள். அன்றைய நாளில் அனைவரும் வெளியூர் திரும்புவதால் அதிகளவு போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படும்.
கார் வைத்திருக்கும் பொது மக்கள் செய்ய வேண்டியது
இதனை தவிர்ப்பதற்கு சில ஐடியாக்களை இந்த பதிவில் பார்க்கலாம். சொந்த ஊர் சென்ற பொதுமக்களில் கார்கள் வைத்திருக்கும் நபர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்படாமல், அதிகாலையிலேயே காரில் புறப்பட்டால் பெரிதளவில் போக்குவரத்து நெரிசல் இன்றி அன்று மாலைக்குள் சென்னையை சென்றடைய முடியும். இதே போல, பேருந்துகளில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பொதுமக்கள் இரவு நேர பயணத்தை தேர்வு செய்யாமல், பகல் நேர பயணத்தை தேர்வு செய்தால் எந்தவித கூட்ட நெரிசலும் இன்றி சென்னையை எளிதாக சென்றடைய முடியும்.
மேலும் படிக்க: Tamil Nadu Election Polling Percent: வரலாறு படைத்த தமிழகம்.. 84.51% வாக்குகள் பதிவு..
போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் பயணம்
அத்துடன், கார் மற்றும் பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் பயணிக்கும் பொதுவான வழியில் செல்லாமல் கூகுள் மேப்பில் போக்குவரத்து நெரிசல் இல்லாத புதிதாக ஒரு வழியை தேர்வு செய்து அந்தப் பாதையில் பயணம் மேற்கொள்ளலாம். அவ்வாறு செல்லும் போது கூட்ட நெரிசலில் தங்களது வாகனம் சிக்கிக் கொள்ளாமலும், அதிகளவு எரிபொருள் விரயம் ஏற்படுவதில் இருந்தும், தேவையற்ற டென்ஷன்களில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
சங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல வாய்ப்பு
பொதுவாகவே, சென்னை பயணம் என்றால் அனைவரும் இரவு நேர பயணத்தை தான் தேர்வு செய்வார்கள். ஆனால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு பகல் நேர பயணமும், போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதையும் டென்ஷன் ஏற்படுத்தாத பயணத்தை நமக்குத் தரும். அத்துடன் கூகுள் மேப் மூலமாக போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதையை தேர்வு செய்தால் டோல் கேட்டில் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம்.
மேலும் படிக்க: இந்த மாவட்டங்களில் கோடை மழை கொட்டப்போகுது.. இன்றைய வானிலை ரிப்போர்ட் இதோ..