தவெக தலைவர் விஜய் பயத்தின் காரணமாக 2 தொகுதிகளில் போட்டியா? ராஜ்மோகன் அளித்த பதில்!

TVK Propaganda Secretary Rajmohan: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பயத்தின் காரணமாக பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறாரா என்ற கேள்விக்கு அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு செயலரும், எழும்பூர் தொகுதி வேட்பாளருமான ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் பயத்தின் காரணமாக 2 தொகுதிகளில் போட்டியா? ராஜ்மோகன் அளித்த பதில்!

விஜய் இரு தொகுதிகளில் போட்டி ஏன்

Published: 

19 Apr 2026 15:11 PM

 IST

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தங்களுக்கான தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் ராஜ்மோகன் வாக்கு சேகரிப்பின் போது, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தினர் குறைகளை கூறுவதற்காக வரவில்லை. குறைகளை நிவர்த்தி செய்வதற்காக வந்துள்ளனர். எழும்பூர் தொகுதியில் உள்ள மக்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போல. எழும்பூர் சட்டமன்ற தொகுதி திமுகவின் கோட்டை என்று கூறுவார்கள். அது நேற்று. ஆனால், தற்போது எழும்பூர் சட்டமன்ற தொகுதி தவெகவின் கோட்டையாக மாறி உள்ளது. எழும்பூர் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த பணிகளில் உள்ள தலையீட்டை சரி செய்து சிறந்த தொகுதியாக மாற்ற வேண்டும்.

திமுகவை அழிக்கும் மெளன அலை

தமிழகம் முழுவதும் மௌன அலை உருவாகியுள்ளது. இந்த அலை தேர்தல் முடிந்து கரையே தொடும்போது சுனாமியாக மாறி தீய சக்தி திமுவை அழிக்கும். தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்யும். தங்கத் தளபதி தமிழகத்தின் முதல்வராக அமர்வார். முந்தைய காலத்தில் நடைபெற்றது போல கட்சிகளின் மாநாடு நடைபெறவில்லை. தவெக தலைவர் விஜய் வந்த பிறகு திமுகவின் மாநாடு கூட வேறு விதமாக மாறி உள்ளது. தமிழக அரசியலில் பேசி பேசி சோதித்தவர்கள் மத்தியில் பேசாமலேயே சாதித்த தலைவராக விஜய் வருகிறார்.

மேலும் படிக்க: எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு.. விஜய் அதிரடி அறிவிப்பு!!

விஜயை காண வரும் கூட்டம் கடவுளின் வரமாகும்

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு நாள் பிரச்சாரத்திற்காக வந்து சென்றிருந்தார். அந்த நாள் முதல் விஜயின் தாக்கம் குறைவதற்கு சுமார் 5 ஆண்டுகள் ஆகும். நெடுஞ்சாலைகள் முழுவதும் விஜய் சாலைகளாக மாறிப் போயின. தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு ஒரு ரூபாய் கூட நாங்கள் வழங்கவில்லை. ஆனால், அதிக அளவிலான மக்கள் அதில் பங்கேற்றிருந்தனர். இது கடவுள் அளித்திருக்கும் வரமாகும்.

விஜய் பயத்தின் காரணமாக இரு தொகுதிகளில் போட்டியா

எனவே, தமிழகத்தின் எதிர்காலம் தமிழக வெற்றி கழகத்தை வைத்தே இருப்பது தெரிகிறது. சட்ட விதிகளின்படியே, தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதே போல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். இதில், பயம் காரணமாக இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார் என்று கூறுவதில் அர்த்தமில்லை. எழும்பூர் தொகுதியில் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு திமுக சார்பில் மற்றொரு பேச்சாளர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: “தவெகவினர் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்”.. அன்புமணி ராமதாஸ் வைத்த வேண்டுகோள்!!

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..