AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீட்பு பணியின்போது மீண்டும் வெடி விபத்து – தீயணைப்பு வீரர்கள் காயம்

Virudhunagar Fire Accident : விருதுநகர் கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் ஏப்ரல் 19, 2026 அன்று  மாலை விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.  மீட்பு பணியின் போது வெடித்ததால் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணியின்போது மீண்டும் வெடி விபத்து – தீயணைப்பு வீரர்கள் காயம்
விருதுநகர் பட்டாசு ஆலையில் மீண்டும் விபத்து
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Apr 2026 21:39 PM IST

விருதுநகர் கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் ஏப்ரல் 19, 2026 அன்று  மாலை விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.  மீட்பு பணியின் போது வெடித்ததால் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தற்போது அவர்களும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் செயல்பட்டு வரும் வனஜா என்ற பட்டாசு ஆலையில் ஏப்ரல் 19, 2026 அன்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் பட்டாசு ஆலை கட்டிடம் முழுவதும் இடி விழுந்து தரைமட்டமானதில் இதுவரை 23 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். இந்த விபத்து இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது வரை பிரதமர் நரேந்திர மோடி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : 22 உயிரை காவு வாங்கிய விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. பகீர் பின்னணி… தீயணைப்பு அதிகாரி கூறுவதென்ன!

பட்டாசுக்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்பட்டும் நிலையில் இன்றைய தினம் செயல்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், பட்டாசு ஆலை உரிமையாளர் முத்து மாணிக்கத்தை வலை வீசி தேடி வருகின்றனர்.

விஜய் இரங்கல்

 

இந்த சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், விருதுநகர் அருகே, கட்டனார்பட்டியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. நொடிப்பொழுதில் பறிபோன 22 உயிர்கள்.. பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி இருக்கின்றனர். ஆனால் பட்டாசு விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்கள் இந்த பகுதியில் தொடர்கதையாகி வருகிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Follow Us