AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நேருக்கு நேர் மோதிய லாரிகள்.. ஓட்டுநர்கள் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..

இன்று காலை அருண்குமார் செய்யாறிலிருந்து ஆற்காடு நோக்கி லாரியை ஓட்டி வந்துள்ளார். அதேபோல் நரேஷ் ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி லாரியை ஓட்டி வந்தார். ஆற்காடு அடுத்த கலவை கூட்ரோடு, முள்ளுவாடி அருகே வந்த போது, இரண்டு லாரிகளும் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதின.

நேருக்கு நேர் மோதிய லாரிகள்.. ஓட்டுநர்கள் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Apr 2026 16:18 PM IST

ஆற்காடு, ஏப்ரல் 18, 2026: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கரிக்கன் தாங்கலை சேர்ந்த பழனி இவரது மகன் அருண்குமார். இவருக்கு வயது 23 ஆகும். லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ். இவருக்கு வயது 25. இவரும் லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இன்று காலை அருண்குமார் செய்யாறிலிருந்து ஆற்காடு நோக்கி லாரியை ஓட்டி வந்துள்ளார். அதேபோல் நரேஷ் ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி லாரியை ஓட்டி வந்தார். ஆற்காடு அடுத்த கலவை கூட்ரோடு, முள்ளுவாடி அருகே வந்த போது, இரண்டு லாரிகளும் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதின.

விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்கள்:

இந்த விபத்தில் இரண்டு லாரிகளின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் லாரி ஓட்டுனர்கள் இருவரும் பிடிப்பாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படிக்க: கணவன் – மனைவி தகராறு.. குறுக்கே வந்த மாமியார்.. போட்டுத் தள்ளிய மருமகன்.. கொலையில் முடிந்த வாக்குவாதம்!

பலத்த சத்தத்துடன் லாரிகள் மோதியதால் அருகில் இருந்த மக்கள் உடனடியாக ஓடி வந்து, இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராணிப்பேட்டை டிஎஸ்பி கனகராஜ், கலவை இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொக்லைன் இயந்திரம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் லாரிகளை தனித்தனியாக அப்புறப்படுத்தி ஓரமாக எடுத்துச் சென்றனர்.

போலீசார் விசாரணை:

லாரி டிரைவர்களின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: பெரம்பூர் – திருச்சி கிழக்கு தொகுதி.. EVM- இல் விஜய்யின் பெயர்- சின்னம் எங்கே இருக்கும் தெரியுமா?

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில், ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us