85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.. தவெக தலைவர் விஜய்..

இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவீத வாக்குகள் வாக்குச்சாவடி பக்கம் வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. 85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.. தவெக தலைவர் விஜய்..

கோப்பு புகைப்படம்

Published: 

24 Apr 2026 14:51 PM

 IST

சென்னை, ஏப்ரல் 24, 2026: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த வாக்குப்பதிவு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சியாக மாறியுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமான வாக்குப்பதிவு சதவீதம் பதிவாகியுள்ளது. மொத்தமாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 1952ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.

தவெக தலைவர் போட்ட போஸ்ட்:

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்: “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசாதாரண சூரர்களுக்கானது மட்டுமே, அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே, பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே என்று ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கியுள்ளது. இது எப்போது தொடங்கியது என்பதை நடுநிலை மனம் கொண்டோர் அனைவரும் உணர்வர்.

85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று:

இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவீத வாக்குகள் வாக்குச்சாவடி பக்கம் வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. 85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.

வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம் போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தைகளுடன் வந்து வாக்களித்ததை கண்டு வியக்காதோர் யாரும் இருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வெளிமாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?

‘தேர்தல் திருவிழா’, ‘ஜனநாயகத் திருவிழா’ என்று சொல்லப்படுவதன் அர்த்தம் உணரப்பட்ட நாள் நேற்று தான் — 2026 ஏப்ரல் 23. எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.

குட்டீஸ்க்கு விஜய் மாமாவின் நன்றி:

தமிழக தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

மேலும் படிக்க: எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..

குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா, நண்பீஸ்களுக்கு என் — உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.

மேலும், நன்றி செலுத்த வேண்டியது நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் தான். ‘இவர்களுக்கு என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப்பிடிப்பார்கள்?’ என்று ஏளனம் செய்தோருக்கு செயலில் பதிலடி தந்த தோழர்களே — உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்,.

Follow Us
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்