தேர்தல் பணிமனைக்கு முன் விசில் சின்னத்தில் கோலமிட்ட விஜய்.. வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு..

ஏப்ரல் 16ஆம் தேதி கட்சியின் முழு தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஜவஹர் நகர் பகுதிக்கு சென்ற விஜய், அங்குள்ள தேர்தல் பணிமனையில் பணிகள் மற்றும் வாக்கு சேகரிப்பு நிலை குறித்து கேட்டறிந்தார்.

தேர்தல் பணிமனைக்கு முன் விசில் சின்னத்தில் கோலமிட்ட விஜய்.. வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு..

விசில் சின்னத்தில் கோலம் போட்ட விஜய்

Published: 

17 Apr 2026 20:48 PM

 IST

சென்னை, ஏப்ரல் 17, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும், தேசிய தலைவர்களும், வேட்பாளர்களும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் உள்ள தேர்தல் பணிமனையை இன்று பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்த பெண்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பணிமனை வாசலில் ‘விசில்’ சின்னத்தை கோலமாக வரைந்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.

மேலும் படிக்க: ராகுல் காந்தி தமிழகம் வருகை.. அழுத்தமா? கூட்டணி தர்மமா? பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்:

இந்த நிலையில், விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நகரில், ஆயிரம் விளக்கு மற்றும் தியாகராய நகர் தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார்.

விசில் சின்னத்தில் கோலமிட்ட விஜய்:

ஏப்ரல் 16ஆம் தேதி கட்சியின் முழு தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஜவஹர் நகர் பகுதிக்கு சென்ற விஜய், அங்குள்ள தேர்தல் பணிமனையில் பணிகள் மற்றும் வாக்கு சேகரிப்பு நிலை குறித்து கேட்டறிந்தார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

மேலும், அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை சரி செய்வேன் என்றும், தனது சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். திடீரென விஜய் வருகையால் மக்கள் அதிகமாக திரண்டதால், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Follow Us
வெறும் 9 ரூபாய் சம்பள உயர்வு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..
பெங்களூருவில் 500 ரூபாயில் வாழ முடியும் - வைரலாகும் பெண்ணின் அனுபவம்
கிளினிக்குள் சிக்கிய சிறுவன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..
காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் கொடுத்த சிறுமி.. இணையத்தில் கசிந்த ஆடியோ..