உள்துறை செயலருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய நிர்மல் குமார்? -வெளியான தகவல்
TVK Seeks Protection : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என கூறி உள்துறை செயலருக்கு கடிதம் எழுதுவதற்கு பதிலாக, மணிப்பூர் ஆளுநருக்கு அக்கட்சியின் நிர்வாகி நிர்மல் குமார் கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் - நிர்மல் குமார்
சென்னை, ஏப்ரல் 1 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெக பரப்புரை மேற்கொள்வதில் சிக்கலை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் 30,2026 அன்று பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என கூறி வில்லிவாக்கம் தொகுதியில் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மத்திய உள்துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், y பிரிவு பாதுகாப்பில் உள்ள விஜய்க்ககு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை செயலருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய நிர்மல் குமார்?
மேலும் சென்னை பெரம்பூரில் இருந்து கொளத்தூருக்கு பரப்புரைக்கு சென்ற வழியில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் உள்துறை செயலருக்கு கடிதம் எழுதுவதற்கு பதிலாக மணிப்பூர் ஆளுநருக்கு நிர்மல் குமார் கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உள்துறை செயலர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற அஜய்குமார் பல்லாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் கடந்த ஓராண்டாக மணிப்பூர் ஆளுநாராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட காரணம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது!
திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிர்மல் குமார்
#களப்பணியில் மக்களுடன் மக்களாக திருப்பரங்குன்றம் மக்களின் பெயர் ஆதரவோடு தீவிர வாக்கு சேகரிப்பில் 🔥🔥🔥@CTR_Nirmalkumar #தமிழகவெற்றிக்கழகம்@TVKVijayHQ @TVKHQITWingOffl pic.twitter.com/5LKBTv7ANf
— Sakthi 🇪🇸 (@sakthisakt8821) April 1, 2026
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியில் 12 இடங்களில் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலயில் அவர் காணொளி வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : திமுக தூண்டுதலால் என் மீது பாலியல் புகார்… அந்த பெண் அக்கா மாதிரி…பூந்தமல்லி தவெக வேட்பாளர் பரபரப்பு பேட்டி!
இந்த நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 2, 2026 அன்று வேட்பு மனு தாக்கல் செய்யவிருக்கிறார். மேலும் அதனைத் தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் கலந்துகொள்ளக்கூடாது, விஜய்யின் வாகனத்தை யாரும் பின் தொடரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.