AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ்.. முதலில் பேட்டிங்கில் களமிறங்கும் லக்னோ!

LSG vs DC: ஐபிஎல் 2026 சீசனின் 5வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 1ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் லக்னோ ஏகானா ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

IPL 2026: டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ்.. முதலில் பேட்டிங்கில் களமிறங்கும் லக்னோ!
டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 01 Apr 2026 19:36 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 5வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 1ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியும் லக்னோ ஏகானா ஸ்டேடியத்தில் மோதுகிறது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தீர்மானித்தார். இதன் மூலம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது சொந்த மண்ணில் முதலில் பேட்டிங் செய்யும். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ஐபிஎல் 2026 சீசனின் தங்களது முதல் போட்டியில் மோதுகின்றன. கடந்த ஐபிஎல் 2025 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் கலவையான ஆட்டத்தையே வெளிப்படுத்தின. இரு அணிகளும் தங்களது முதல் ஐபிஎல் கோப்பைக்காக இன்னும் காத்திருக்கும் நிலையில், இன்றைய வெற்றியின் மூலம் ஒரு நேர்மறையான தொடக்கத்தை ஏற்படுத்த முனையும். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ரிஷப் பண்டும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அக்சர் படேலும் கேப்டனாக உள்ளனர்.

ALSO READ: சிக்கலில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.. விரைவில் ஒரு போட்டியில் விளையாட தடையா?

இதுவரை லக்னோ ஸ்டேடியத்தின் வரலாறு என்ன..?

லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில், போட்டியில் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் கணிசமான உதவி கிடைக்கிறது. முதலில் பேட் செய்த அணி 9 முறையும், சேஸிங் செய்த அணி 12 முறையும் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

நேருக்கு நேர் சாதனை:

ஐபிஎல் வரலாற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 போட்டிகளிலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் இரு அணிகளும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளன என்பது தெளிவாகிறது.

ALSO READ: எனக்கு கிரிக்கெட்டில் நண்பர்கள் இல்லை.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அர்ஜூன் டெண்டுல்கர்!

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவன்:

ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், முகுல் சவுத்ரி, மொஹ்சின் கான், முகமது ஷமி, அன்ரிச் நோர்கியா, பிரின்ஸ் யாதவ்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிளேயிங் லெவன்:

கே.எல்.ராகுல், பதும் நிசாங்கா, நிதிஷ் ராணா, விப்ராஜ் நிகாம், அக்சர் படேல் (கேப்டன்), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ், டி நடராஜன், முகேஷ் குமார்.

Follow Us