“அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் விஜய்”.. திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு!!

Tamilnadu Assembly Election: திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்புகிறார் என்பது அவரின் சொந்த நிலைப்பாடு. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் யாரை அமர்த்த பார்க்கிறார்?. அவரே அந்த இடத்தில் அமர விரும்புகிறார் என்றால், இந்த தேர்தலில் அது சாத்தியமா? என்பது அவருக்கே தெரியும்.

அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் விஜய்.. திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு!!

திருமாவளவன்

Updated On: 

15 Apr 2026 07:37 AM

 IST

Tamilnadu polls 2026: திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு மாநில தலைமைச் செயலாளரையும் தேர்தல் ஆணையம் மாற்றியது இல்லை. இது அப்பட்டமான பாசிச நடவடிக்கை ஆகும் என்று விமர்சித்தார்.

மேலும் படிக்க: வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.. விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..

திமுக, அதிமுக இடையேதான் போட்டி:

மேலும், மத்திய அரசு தேசிய அளவில் மது விலக்கு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பதற்கான கொள்கைகளை வரையறுக்க வேண்டும். அதற்கான சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் திமுக, அதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது. பாஜக – அதிமுக கூட்டணி செய்கிற மக்கள் விரோத அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார். ஆனால், விஜய் திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறார்.

இந்த தேர்தலில் அது சாத்தியமா?

அவர் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்புகிறார் என்பது அவரின் சொந்த நிலைப்பாடு. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் யாரை அமர்த்த பார்க்கிறார்?. அவரே அந்த இடத்தில் அமர விரும்புகிறார் என்றால், இந்த தேர்தலில் அது சாத்தியமா? என்பது அவருக்கே தெரியும். திமுக ஆட்சியை அப்புறப்படுத்திவிட்டு, அவருடைய தலைமையில் ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்தும், பாஜக – அதிமுக கைகள்தான் ஓங்கும் என தெரிந்தும், அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

விஜய்யின் அரசியலை அடையாளம் காட்டுகிறோம்:

எனவே, அவருடைய தேர்தல் வியூகம் அதிமுக-பாஜகவிற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. எனவே, நண்பர் விஜய்யின் அரசியலை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். திமுகவை அப்புறப்படுத்திவிட்டு பாஜக, அதிமுகவை அமர வைப்பது தான் என் வேலை என்பதை விஜய் மறைமுகமாக சொல்கிறார்.

மேலும் படிக்க: பிரதமரை மிரட்டும் தொனியில் பேசுவதா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்..

பிரேமலதா மீது அதிருப்தி இல்லை:

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செயலில் எந்த அதிருப்தியும் இல்லை. பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். ஆனால், நான் கூட்டத்தில் பேசும்போது, எங்கள் கட்சி வேட்பாளர்கள் பெயரை மட்டும் சொன்னால் சரியாக இருக்காது என அனைத்து வேட்பாளர்களின் பெயர்களையும் சொன்னேன். இதை திரித்து கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us
Related Stories
நம் ஓட்டு நம் உரிமை.. வாட்ஸ் ஆப் வழியாக வீடு தேடி வரும் தேர்தல் விழிப்புணர்வு.. தேர்தல் ஆணையம் மாஸ் பிளான்!
சட்டமன்ற தேர்தல்.. சிறையில் இருந்து ஜனநாயக கடமை… 61 கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு!
ஊழல் அரசியல்வாதிகள் ரத்தம் கக்க வேண்டும்.. சுடுகாட்டில் விபரீத பூஜை செய்த சுயேட்சை வேட்பாளர்.. முழு விவரம் உள்ளே!
Tamil Nadu Election 2026 Live: நெருங்கும் தேர்தல்… இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி நாகர்கோவில் வருகை.. 1.5 கி.மீ பிரம்மாண்ட ரோடு ஷோ.. குலுங்கப்போகும் குமரி!
Arakonam Constituency Election 2026: இந்தியாவின் முக்கிய ரயில்வே ஜங்ஷன்களில் ஒன்றான அரக்கோணம் தொகுதி.. மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனை என்ன?
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்