“தவெகவினர் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்”.. அன்புமணி ராமதாஸ் வைத்த வேண்டுகோள்!!

Tamilnadu Assembly Election: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறித்துப் பேசிய அன்புமணி, "அவர் திமுக கூட்டணியில் இருந்தாலும், அவரது செயல்பாடுகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்குச் சாதகமாகவே உள்ளன. அவர் அதிமுக கூட்டணி வெற்றிக்காகத் தீவிரமாகப் பாடுபடுகிறார்" என்று அவர் குறிப்பிட்டார்.

தவெகவினர் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் வைத்த வேண்டுகோள்!!

அன்புமணி ராமதாஸ்

Updated On: 

19 Apr 2026 13:52 PM

 IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள ஒரு முக்கிய வேண்டுகோள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சொற்ப நாட்கள் இருக்கக்கூடிய சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தசூழலில்தான் அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கக்கூடிய அன்புமணி தரப்பு பாமகவிற்கு ஏற்கனவே பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

இதையும் படிக்க: “மகனை முதல்வராக்கவே ஸ்டாலின் உழைக்கிறார்”.. ஈரோட்டில் அமித் ஷா வைத்த ‘வாரிசு’ அரசியல் விமர்சனம்!!

விஜய் ஆதரவாளர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்:

இதுகுறித்து கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். அவரது நோக்கம் சிறப்பானது என்றாலும், இந்தத் தேர்தலில் அவரால் கணிசமான வாக்குகளைப் பெற முடியுமே தவிர, ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் விஜய்யின் உண்மையான விருப்பம் என்றால், அவரது ஆதரவாளர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்காமல் அதிமுக கூட்டணிக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் திமுக-வை அதிகாரத்தில் இருந்து அகற்ற முடியும்” என்று ஒரு புதிய அரசியல் கணக்கை முன்வைத்தார்.

ரூ.8000 கூப்பன் மீதுதான் நம்பிக்கை:

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி முறியடித்ததாகக் குறிப்பிட்ட அவர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா நகலை முதல்வராக இருந்து கொண்டு எரித்தது தேசத்துரோக செயல். இதற்கு தண்டனை வழங்க வேண்டும். இதனை பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் மனநிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். “திமுக-விற்கு திராவிட மாடல் மீது நம்பிக்கை இல்லை, 8000 ரூபாய் கூப்பன் மீதுதான் நம்பிக்கை உள்ளது” என்று கிண்டலாக விமர்சித்தார்.

பிரேமலதா விஜயகாந்த் குறித்து கருத்து:

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறித்துப் பேசிய அன்புமணி, “அவர் திமுக கூட்டணியில் இருந்தாலும், அவரது செயல்பாடுகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்குச் சாதகமாகவே உள்ளன. அவர் அதிமுக கூட்டணி வெற்றிக்காகத் தீவிரமாகப் பாடுபடுகிறார்” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..

அரசியல் பின்னணி:

தமிழகத்தில் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்குகள் தவெக பக்கம் செல்வது மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக வட தமிழகத்தில் பாமக-வின் வாக்கு வங்கியில் தவெக தாக்கம் செலுத்தக்கூடும் என்ற கணிப்புகளுக்கு மத்தியில், அன்புமணியின் இந்த “வாக்கு மாற்று” வேண்டுகோள் முக்கியத்துவம் பெறுகிறது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..