“ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!” – முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!

Tamilnadu Assembly Election: ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காகப் பல மைல்கள் கடந்து வந்த நிகழ்வுகளும் பதிவாகின. குறிப்பாக, பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர், தனது முதல் வாக்கைச் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சென்னைக்கு வந்துள்ளார். "மத்தியான வெயிலுக்கு முன்னரே வாக்களித்துவிட வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே வந்துவிட்டேன்" என்று அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்! - முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!

மாதிரிப் புகைப்படம்

Published: 

23 Apr 2026 14:21 PM

 IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, இன்று மாநிலம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். “வாக்களிப்பது நமது உரிமை” என்பதை உணர்ந்து, வெளியூர்களில் இருந்தும் கூட வந்து வாக்களித்த இளம் தலைமுறையினரின் அனுபவங்கள் கவனம் ஈர்க்கின்றன. வாக்குச்சாவடிக்கு முதல்முறையாகச் சென்ற பல இளைஞர்கள் தங்களது ஆரம்பக்கட்ட அனுபவங்களைப் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிகளிலும் பகிர்ந்து கொண்டனர்.

இதையும் படிக்க: சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ‘டீனா’ ரோபோ.. 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் புதுமை!!

நர்வஸ் டூ ஹேப்பி:

வாக்குச்சாவடிக்கு உள்ளே நுழைவதற்கு முன்னால் “ஏதாவது கேள்விகள் கேட்பார்களா?”, “எப்படி வாக்களிக்க வேண்டும்?” என்ற சிறிய பதட்டம் இருந்ததாகவும், ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் மிகவும் கனிவாக வழிநடத்தியதால் எளிதாக வாக்களிக்க முடிந்ததாகவும் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்திய பின் வரும் அந்தச் சத்தம் (Beep sound) கேட்ட பின்னரே வெளியே வர வேண்டும் என்பது போன்ற நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டது தங்களுக்குப் புதிய அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்டனர்.

வெளியூர்களில் இருந்து வந்து ஆர்வம்:

ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காகப் பல மைல்கள் கடந்து வந்த நிகழ்வுகளும் பதிவாகின. குறிப்பாக, பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர், தனது முதல் வாக்கைச் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சென்னைக்கு வந்துள்ளார். “மத்தியான வெயிலுக்கு முன்னரே வாக்களித்துவிட வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே வந்துவிட்டேன்” என்று அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

இளம் வாக்காளர்கள் சொல்லும் செய்தி:

வாக்களித்த பின் இளம் தலைமுறையினர் சமூகத்திற்கு வைத்த சில முக்கிய வேண்டுகோள்கள். உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள். “இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை, வரிசையில் நின்று உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்” என வலியுறுத்தினர்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கான தீர்மானம்: “நாம் செய்யும் இந்த ஒரு நாள் செயல் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கான மாற்றத்தைத் தீர்மானிக்கப் போகிறது. எனவே, வேலையாக இருந்தாலும் ஒரு நாள் விடுப்பு எடுத்து வந்து வாக்களியுங்கள்” எனத் தெரிவித்தனர்.

அனைவரும் யோசித்து, தங்களுக்குப் பிடித்த சின்னத்திற்கு வாக்களித்து 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். முதல்முறை வாக்காளர்களின் இந்த எழுச்சியும், தெளிவான பார்வையும் தமிழகத் தேர்தலின் ஒரு முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Tamil Nadu Election 2026 LIVE: தமிழ்நாட்டின் தேர்தல் திருவிழா.. வாக்குப்பதிவு விறுவிறுப்பு

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..