“சொந்தமாக கார் கூட இல்லையா?”.. முதல்வரின் சொத்து விவரம் குறித்து காளியம்மாள் கடும் விமர்சனம்!!
Tamilnadu Assembly Election: திமுக ஆட்சியில் அதிமுக கொண்டு வந்த பல்வேறு முக்கிய திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக காளியம்மாள் குற்றம் சாட்டினார். குறிப்பாக அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம். ஆடு, மாடு வழங்கும் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியத் தொகை. தாலிக்கு தங்கம் திட்டம் மற்றும் மகப்பேறு உதவித்தொகை. பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிவழங்கும் திட்டம்.

காளியம்மாள், முதல்வர் ஸ்டாலின்
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்ற மாலையுடன் 6 மணியுடன் பரப்புரை முடிகிறது. தொடரந்து, நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிர பரப்புரை நடந்து வந்தது. அந்தவகையில், இறுதி கட்ட பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய காளியம்மாள், திமுக அரசு மற்றும் அதன் தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
இதையும் படிக்க: இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் தலைவர்கள்.. இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்வு..
வாரிசு அரசியல் குறித்த சாடல்:
தமிழகம் என்பது கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும் எழுதி கொடுக்கப்பட்ட ஒன்றல்ல என சாடிய அவர், கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி, அதன்பின் இன்பநிதி என ஒரு குடும்பமே ஆட்சியில் இருக்க நினைப்பது சரியல்ல என்று குறிப்பிட்டார். ஒரு சாதாரண விவசாயியின் மகனான எடப்பாடி பழனிசாமி எப்படி நான்கு ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை வழங்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் என்றும், எனவே அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள்:
திமுக ஆட்சியில் அதிமுக கொண்டு வந்த பல்வேறு முக்கிய திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக காளியம்மாள் குற்றம் சாட்டினார். குறிப்பாக அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம். ஆடு, மாடு வழங்கும் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியத் தொகை. தாலிக்கு தங்கம் திட்டம் மற்றும் மகப்பேறு உதவித்தொகை. பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிவழங்கும் திட்டம்.
இதையும் படிக்க: “தமிழகத்தை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்!”.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
சொத்து விவரம் குறித்த கிண்டல்:
முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்த சொத்து விவரங்களை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடனும் ஒரு குடும்பத்தின் சொத்தாக இருக்கும்போது, முதலமைச்சருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்று அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் கூறியுள்ளது வியப்பாக உள்ளது என விமர்சித்தார். மேலும், அவரது வங்கிக் கணக்கில் வெறும் 40,000 ரூபாயும், கையில் ரொக்கமாக 10,000 ரூபாய் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் ஒரு கார் வாங்கித் தருகிறோம். அந்த காரில் அன்பளிப்பு அதிமுக என்று எழுதி பரிசாக கொடுப்போம் என்றார்.