“அதிமுக, பாமகவிற்கு செக்”.. சசிகலா – ராமதாஸ் கூட்டணியின் புதிய தேர்தல் வியூகம்.. வெடிக்கும் அரசியல் போர்!!
Tamilnadu Assembly Election: அதிமுகவின் 9 முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து, அந்தந்தத் தொகுதிகளில் நன்கு அறிமுகமான முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைச் சசிகலா களமிறக்கியுள்ளார். அந்தவகையில், எடப்பாடி தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, சசிகலா தரப்பில் ஏ.எல்.சுரேஷ் போட்டியிடுகிறார்.

ராமதாஸ், சசிகலா
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் அன்புமணி தலைமையிலான பாமக ஆகிய இரு கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் சசிகலா மற்றும் ராமதாஸ் தரப்பு களம் இறங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த நினைக்கும் சசிகலாவும், தனது மகன் அன்புமணியிடமிருந்து கட்சியை மீட்கத் துடிக்கும் ராமதாஸும் இணைந்து ஒரு புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணி மொத்தம் 120 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதையும் படிக்க: “அடுத்த 10 நாட்கள் மிக முக்கியம்”.. தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட கட்டளை.. அதிரும் தேர்தல் களம்!!
சசிகலா, ராமதாஸ் தரப்பு:
சசிகலாவின் ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ 71 தொகுதிகளில் களம் காண்கிறது. இவர்கள் ‘தென்னந்தோப்பு’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அதேசமயம், ராமதாஸ் ஆதரவாளர்கள் 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில் 31 பேர் ‘சிலிண்டர்’ சின்னத்திலும், திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி வேட்பாளர் நாகேந்திரன் ‘குக்கர்’ சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக பலமான வேட்பாளர்கள்:
அதிமுகவின் 9 முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து, அந்தந்தத் தொகுதிகளில் நன்கு அறிமுகமான முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைச் சசிகலா களமிறக்கியுள்ளார். அந்தவகையில், எடப்பாடி தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, சசிகலா தரப்பில் ஏ.எல்.சுரேஷ் போட்டியிடுகிறார்.
கோவில்பட்டி தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு எதிராக சிவகண்ணன், திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக ஜீவிதா நாச்சியார், விராலிமலை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராக கார்த்திகா, மயிலம் தொகுதியில் சி.வி.சண்முகத்தை எதிர்த்து சேகர் ஆகியோர் சசிகலா தரப்பில் போட்டியிடுகின்றனர். மேலும், உசிலம்பட்டி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ ஐயப்பன், சசிகலா கட்சி சார்பிலேயே மீண்டும் களம் இறங்கியுள்ளார்.
ராமதாஸ் தரப்பின் முக்கிய வேட்பாளர்கள்:
ராமதாஸ் தரப்பில் சேலம் மேற்கு தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ அருள் மீண்டும் போட்டியிடுகிறார். பாமக பொதுச்செயலாளர் முரளிசங்கர் காட்டுமன்னார் கோவில் தொகுதியிலும், மாக்கா ஸ்டாலின் கும்பகோணத்திலும் களம் காண்கின்றனர்.
இதையும் படிக்க: தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி.. “சிங்கிள் டிஜிட்” மோதல்… எத்தனை பேர் தெரியுமா!
அதிரடி அரசியல் நகர்வுகள்:
சொந்த மகனே கட்சியை அபகரித்துக் கொண்டதாக ராமதாஸ் குற்றம் சாட்டி வரும் நிலையில், பாமக வலுவாக உள்ள தொகுதிகளில் ராமதாஸிற்கு ஆதரவாக ‘அனுதாப அலையும்’, அன்புமணிக்கு எதிராக ‘அதிருப்தி அலையும்’ நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சசிகலா மற்றும் ராமதாஸின் இந்த அதிரடி நகர்வுகள் அதிமுக மற்றும் அன்புமணி தரப்பிற்குத் தேர்தல் களத்தில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.