அதிமுக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு தேர்தலில் வாய்ப்பு..

அதிமுகவின் 3வது கட்ட மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அதிமுக போட்டியிடும் 167 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில், திரு.வி.க நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார்.

அதிமுக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு தேர்தலில் வாய்ப்பு..

எடப்பாடி பழனிசாமி

Updated On: 

29 Mar 2026 09:16 AM

 IST

Tamilnadu polls 2026: அதிமுகவின் 3வது கட்ட மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அதிமுக போட்டியிடும் 167 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில், திரு.வி.க நகரில் மறைந்த மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார். அவர் தமிழ்மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து களம் காண்கிறார். குறிப்பாக, அதிமுக வெளியிட்டுள்ள இந்த வேட்பாளர் பட்டியலில், அது கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்று எதுவும் குறிப்படப்படாமல், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் விவரம்:

ஆயிரம் விளக்கு – வளர்மதி
அண்ணா நகர் – கோகுல இந்திரா
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – ஆதி ராஜாராம்
துறைமுகம் – ராயபுரம் மனோ
விருகம்பாக்கம் – விருகை ரவி
தி.நகர் – சத்யநாராயணன்
திரு.வி.க.நகர் – பொர்கொடி ஆம்ஸ்ட்ராங்
எழும்பூர் – அபிஷேக் ரங்கசாமி
ஆலங்குடி – தன.விமல்
கொளத்தூர் – சந்தனகிருஷ்ணன்
ஆலந்தூர் – எஸ்.சரவணன்
திருச்சூழி – ராஜவர்மன்
வில்லிவாக்கம் – விஜயகுமார்
ஆர்.கே.நகர் – ஆர்.எஸ்.ராஜேஷ்
சோழிங்கநல்லூர் – கே.பி.கந்தன்
வேளச்சேரி – எம்.கே.அசோக்
திட்டக்குடி தனி – முருகுமாறன்

அதிமுக – திமுக நேரடி மோதல்:

திமுக சார்பில் நேற்றைய தினம் ஒரே கட்டமாக அக்கட்சி போட்டியிடும் 164 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 25ந்தேதி அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் (மார்ச் 29) இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக புது முகங்களுக்கு அதிகளவில் வாய்ப்பளித்துள்ளது. குறிப்பாக, முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட 121 தொகுதிகளில் அதிமுகவும் – திமுகவும் நேரடியாக மோதுகிறது.

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்