புதுச்சேரியில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… முன்னாள் பாஜக அமைச்சர்- EX ஐபிஎஸ் அதிகாரிக்கு வாய்ப்பு!
Puducherry TVK Candidate; புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடக் கூடிய 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். அதில், பாஜகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் தவெக வேட்பாளர் பட்டியில் வெளியீடு
தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 9- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி, ஆளும் என். ஆர். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் முதல்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதே போல, புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். இதில்,
மேலும் படிக்க: Madurai South Constituency Election 2026: அதிமுக vs திமுக.. மதுரை தெற்கு தொகுதி யாருக்கு சாதகம்?
- லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வி. சாமிநாதன்
- காரைக்கால் தெற்கு சட்டமன்ற தொகுதியில் கே. ஏ. யு. அசனா.
- உழவர்கரை சட்டமன்ற தொகுதியில் எஸ். சசிபாலன்.
- ராஜ்பவன் சட்டமன்ற தொகுதியில் வி.ஜே. சந்திரன் ( முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி).
- முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் என். மணிபாலன்.
- மங்கலம் சட்டமன்ற தொகுதியில் எம். கே. சத்யா.
- கதிர்கிராமம் சட்டமன்ற தொகுதியில் ஆர். ஜெயந்தி.
- நெட்டப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் (தனி) பெரியசாமி.
- திருபுவனை சட்டமன்ற தொகுதியில் ( தனி) சாய் ஜே. சரவணன் குமார் (பாஜக முன்னாள் அமைச்சர்).
- முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பிரகாஷ் குமார்.
- பாகூர் சட்டமன்ற தொகுதியில் தனவேலு.
- உப்பளம் சட்டமன்ற தொகுதியில் சிவா.
- அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியில் குமரவேலு.
- வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் ரமேஷ்.
- மணவெளி சட்டமன்ற தொகுதியில் ராமு.
- உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மரிய பிரான்சிஸ்.
- மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதிகள் பாரதிதாசன்.
- காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் சுமன்.
- நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியில் விக்னேஸ்வரன்.
- ஊசுடு சட்டமன்ற தொகுதியில் ( தனி) சரவண பவா.
- காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் சசிகுமார்.
- ஏம்பலம் சட்டமன்ற தொகுதியில் ( தனி) தமிழ்ச்செல்வன்.
- தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் பன்னீர்செல்வம்.
- திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் ராஜா முஹம்மது.
- நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் ( தனி) காமராஜ்.
- நிரவி திருப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் கணேஷ்.
- காரைக்கால் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வெங்கடேஷ்.
- ஏனாம் சட்டமன்ற தொகுதியில் தோட்டா ராஜு.
- மாஹே சட்டமன்ற தொகுதியில் பிரிதேஷ்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 22, 2026
ஆகிய 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான 30 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில், என். ஆர். காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டு வந்தது. ஆனால், கூட்டணி அமையாத நிலையில், தவெக தனித்து களம் காண உள்ளது.
மேலும் படிக்க: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர்களை அறிவித்த சசிகலா