விஜய் முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது…கே.ஏ.செங்கோட்டையன் சூளுரை!
Sengottaiyan Speech: தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக விஜய் வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று அந்தக் கட்சியின் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், சில கட்சிகளை மறைமுகமாக விமர்சித்தார்.

விஜய் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் பேசியதாவது: சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை ஆளுகிற புதிய முகத்தை மக்கள் பார்க்க உள்ளனர். இதற்காக பணிகளை மேற்கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் கிடைத்ததால், நமது கட்சியினர் அனைவரும் விசில்களை அடித்து வருகின்றனர். இதனால், எதிர்காலத்தில் போலீசார் மற்றும் பேருந்து நடத்துனர்கள் விசில் அடிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சிலர் சாதாரணமாக எண்ணினர். அவர், படத்தில் மட்டும் ஹீரோ கிடையாது. தமிழகத்தின் உண்மையான ஹீரோ அவர்தான்.
கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக கூட்டணியை வீழ்த்துவோம் என்று ஒரு கட்சியின் தலைவர் பேசினார். ஆனால், அதற்கு யாரும் கைதட்டவில்லை. ஏராளமான பெண்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ரூ.1000 கொடுத்து அழைத்து வந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தக்கூடிய ஒரே தலைவர் நமது தளபதி விஜய் தான். நான் எத்தனையோ தலைவர்களை பார்த்து விட்டேன். தமிழகத்தில் யாருக்கும் இல்லாத புகழ் விஜய்க்கு உள்ளது.
மேலும் படிக்க: புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்? தேர்தல் ஆணையத்திலும் பதிவு…கட்சியின் பெயர் என்ன தெரியுமா!
ரூ.1000 கோடி வருமானத்தை விட்டு வந்த விஜய்
ரூ.1000 கோடி வருமானம் தேவையில்லை என்று மக்களை காப்பதற்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். இந்த தலைவனின் தொலைநோக்கு பார்வை, சிந்தனை அனைத்தும் தமிழக மக்களுக்களின் நலனுக்காகவே உள்ளது. தமிழகத்தில் உள்ள எந்த மக்களிடம் கேட்டாலும் விஜய்க்கு தான் வாக்கு செலுத்துவோம் என்று கூறுகின்றனர். கடவுளிடம் வேண்டினால் தான் கிடைக்கும். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் வேண்டாமலேயே அனைத்தையும் வாரி வழங்க உள்ளார்.
விஜய் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது
விஜய்யை முதல்வர் ஆக்கியே தீர்வோம் என்ற முனைப்பில் தமிழக மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் நல்லாட்சியை கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் விஜய் தான். எந்த சக்தியாலும் தமிழக வெற்றி கழகத்தை தடுத்து நிறுத்த முடியாது. விஜய் முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. சில கட்சிகளின் கூட்டங்களில் ரூ. ஆயிரம் கொடுத்து கூட்டம் கூட்டப்படுகிறது. ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் ஒரு ரூபாய் இன்றி ஏராளமானோர் கூடியுள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “நாதகவுக்கு போட்டி யாரும் இல்லை”.. 16% வாக்கு பெறுவோம்.. சீமான் நம்பிக்கை..