ஆர்.எஸ்.எஸ் எண்ணங்களை சீமான் பிரதிபலிக்கிறார்…தொல்.திருமாவளவன் அட்டாக்!

Seeman Reflect The Thoughts Of RSS: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர் எஸ் எஸ்- இயக்கத்தின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். மேலும், தமிழ் தேசியம் குறித்து குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் எண்ணங்களை சீமான் பிரதிபலிக்கிறார்...தொல்.திருமாவளவன் அட்டாக்!

ஆர்எஸ்எஸ் எண்ணங்களை பிரதிபலிக்கும் சீமான்

Published: 

29 Dec 2025 16:04 PM

 IST

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் நீண்ட காலமாக தமிழ் தேசியம் என்ற அரசியல் பேசப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழ் தேசியத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னெடுக்கும் தமிழ் தேசிய அரசியலை மனப்பூர்வமாக வரவேற்றுள்ளோம். வாழ்த்தியுள்ளோம். இதில், எங்களுக்கு எப்போதும் மாற்று கருத்து இல்லை. ஆனால், அவர் பேசுகின்ற அரசியலில் பெரியார் எதிர்ப்பு என்பது ஆழமாக உள்ளது. பெரியாரின் பிம்பத்தை தவிர்த்து, அவர் கட்டி எழுப்ப விரும்புகின்ற தேசியம், தமிழ் தேசியமா என்ற கேள்வி எழுகிறது.

பிராமண கடப்பாறை மூலம் திராவிட இருப்பு தகர்ப்பு

பாரதி பேச்சு விழாவில் பங்கேற்ற சீமான் பிராமண கடப்பாறையை கொண்டு திராவிட இருப்பை தகர்ப்பதாக கூறினார். சீமான் பாரதி விழாவில் பங்கேற்றதை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஏனென்றால், நானே பல பாரதி விழாக்களில் பங்கேற்று உரையாற்றி உள்ளேன். அவரிடம் ஜாதி ஒழிப்பு என்ற சிந்தனை மேலோங்கி இருந்ததை யாராலும் மறுத்து விட முடியாது.

மேலும் படிக்க: விஜய்க்கு அவ்வளவு தைரியமா…தவெகவினருக்கு நாவடக்கம் தேவை…செல்லூர் ராஜூ ஆவேசம்!

சீமான் அரசியலில் முரண்பாடுகள்

பெண் விடுதலை தொடர்பான கருத்தியல் அவரிடம் இருந்ததை ஏற்கிறோம். ஆனாலும், அவரது அரசியலில் தமக்கு முரண்பாடான பகுதிகள் உள்ளன. சீமான் திமுகவை மற்றும் எதிர்க்கவில்லை. அடிப்படையான தத்துவத்தையும் எதிர்க்கிறார். எனவே, இவர் பெரியாரை எதிர்க்கிறார் என்றால் அவர் அம்பேத்கர் உள்ளிட்டோரின் கொள்கைகளை தகர்க்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

ஆர் எஸ் எஸ்-இன் பிரதிபலிப்பாக சீமான்

சீமான், ஹெச் ராஜா பேசுவதைப் போலவும், குருமூர்த்தி நினைக்கும் அரசியலை விரும்புவது போலவும் செயல்படுகிறார் ஆர் எஸ் எஸ் எண்ணங்களை சீமான் பிரதிபலித்து வருகிறார். இந்த நிலையில் இருந்து தான் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சித்ததே தவிர, தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு, வெறுப்பும் கிடையாது.

விசிகவின் தொகுதி நிலைப்பாடு

பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்த போது, நான் அடைந்த எம்எல்ஏ பதவியை திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2.5 ஆண்டுகளில் தூக்கி எறிந்து விட்டேன். பாஜகவின் மூத்த தலைவர்களுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. ஆனால், இந்த நட்பு வேறு, அவர்களின் அரசியலை உள்வாங்கி பிரதிபலிப்பது என்பது வேறு ஆகும். எத்தனை தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டுமா. வேண்டாமா என்பது குறித்து நாங்கள் தான் முடிவு செய்து அறிவிப்போம்.

மேலும் படிக்க: அன்புமணி நெஞ்சில் குத்துகிறார்…கண்ணீர் சிந்தி அழுத ராமதாஸ்!

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு