பாமகவில் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு… செளமியா அன்புமணிக்கு எதிராக சரவணன் போட்டி!

Ramadoss PMK Candidate: ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 10 பேர் அடங்கிய 2- ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அன்புமணி தரப்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் செளமியா அன்புமணிக்கு எதிராக அ. சரவணன் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார்.

பாமகவில் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு... செளமியா அன்புமணிக்கு எதிராக சரவணன் போட்டி!

பாமக 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Published: 

01 Apr 2026 06:42 AM

 IST

தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளன. இந்த கட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமகவுடன், சசிகலா தொடங்கிய அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதன்படி, சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகியோர் தனித்தனியே முதல்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதன்படி, பாமக நிறுவனர் ராமதாஸ் 2- ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில்,

மேலும் படிக்க: திமுக தேர்தல் அறிக்கையை பார்த்து எடப்பாடி புலம்புகிறார்… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

  • திருப்போரூர் தொகுதி என். எஸ். ஏகாம்பரம்.
  • உத்திரமேரூர் தொகுதி ஸ்ரீதர்.
  • கும்மிடிப்பூண்டி தொகுதி சங்கர்.
  • திருவள்ளூர் தொகுதி நா. வெங்கடேசன்.
  • செஞ்சி தொகுதி கனல்.
  • தர்மபுரி தொகுதி அ. சரவணன்.
  • ஜெயங்கொண்டம் தொகுதி காடுவெட்டி ரவி.
  • செய்யாறு தொகுதி தி.கா. சீனிவாசன்.
  • அந்தியூர் தொகுதி எஸ். சி. ஆர். கோபால்.
  • புவனகிரி தொகுதி எம். ஆர். பாலமுருகன். ஆகிய 10 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

செளமியா அன்புமணிக்கு எதிராக…

நேற்று முன்தினம் பாமகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் சேலம் மேற்கு தொகுதியில் அருள் (மாநில இணை பொதுச் செயலாளர்), வந்தவாசி தொகுதியில் முரளி சங்கர் (பொதுச் செயலாளர்), கும்பகோணம் தொகுதியில் ம. க. ஸ்டாலின் (மாநில நிர்வாக குழு உறுப்பினர்), விருதாச்சலம் தொகுதியில் சுரேஷ் (மாவட்ட செயலாளர்), மயிலாடுதுறை தொகுதியில் சக்திவேல் (மாவட்ட செயலாளர்) ஆகியோரை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதில், தர்மபுரி தொகுதியில் அன்புமணி தரப்பு பாமகவில் சௌமியா அன்புமணி போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிராக ராமதாஸ் தலைமையிலான பாமக சார்பில் அ. சரவணன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

ராமதாஸ்-சசிகலா புதிய கூட்டணி

அன்புமணி தரப்பு பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இணைய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க முடியாமல் ராமதாஸ் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் சசிகலா புதிதாக கட்சி தொடங்கியிருந்த நிலையில், ராமதாசை 2 முறை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார். அதன் அடிப்படையில், இருவரும் கூட்டணி அமைத்து தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தனர். அதன்படி வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… எடப்பாடி கே.பழனிசாமி!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..