புனிதமான ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.. தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

PM Modi X Post On Tamil Nadu Election | தமிழகத்தில் இன்று 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், புனிதமான ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என்று தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புனிதமான ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.. தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

பிரதமர் நரேந்திர மோடி

Updated On: 

23 Apr 2026 07:40 AM

 IST

சென்னை, ஏப்ரல் 23 : அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 தொடங்கியது

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசின் 5 ஆண்டுகால பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. இது திமுக, அதிமுக, நாதக, தவெக என பலமுனை போட்டியாக அமைந்துள்ளது. தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் உடன் தேர்தலை சந்திக்கும் நிலையில், நாதக மற்றும் தவெக தனித்து போட்டியிடுகிறது.

இதையும் படிங்க : வாக்குச்சாவடிக்குள் போட்டோ, வீடியோ எடுக்ககூடாது.. மீறினால் சிறை தண்டனை

தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இணைந்து இந்த புனிதமான ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படிங்க : Tamilnadu Election 2026 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் திருவிழா”.. ஆட்சி அரியணையில் ஏறப்போவது யார்?

குறிப்பாக தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து சாதனை அளவில் வாக்குகளை பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று பிரதமர் தனது பதிவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..